தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக இருப்பவர்களுக்கும் ரசிகர்கள் உண்டு என்பது மறுக்க முடியாத ஒரு உண்மையாகும். சன் டிவி குழுமம் தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணிபுரிந்து மக்கள் மனதில் இன்றளவும் நிலைத்து நிற்கும் பெண் தொகுப்பாளினி மகேஸ்வரி.
மகேஸ்வரி அவர்கள் சன் டிவியில் ஒளிபரப்பான அசத்தப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் தொகுப்பாளினியாக அறிமுகமானவர்.
தொடர்ந்து அவர் பல தொலைக்காட்சிகளில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தார். இதன் இடையில் அவருக்கு திருமணம் ஆனதால் சில காலங்களாக எந்த ஒரு நிகழ்ச்சியிலும் எதிலும் பங்கு பெறாமல் இருந்தார். தற்பொழுது அவருக்கு ஒரு குழந்தையும் உள்ளது. குழந்தைக்கு தாயான மகேஸ்வரி அவர்கள் தற்போது மீண்டும் தொலைக்காட்சிகளில் பணிபுரிய தொடங்கியுள்ளார் மற்றும் சில சீரியல்களிலும் நடித்து வருகிறார். இவர் இதற்கு முன்பு சினிமா துறையில் சில படங்களில் நடித்து உள்ளார் மந்திரப்புன்னகை, சென்னை-28, குயில் போன்ற படங்கள் ஆகும்.
இண்டிபெண்டன்ட் தயாரா வாழ்ந்து வரும் மகேஸ்வரி அவர்கள் தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சி பேட்டைராப் என்ற நிகழ்ச்சியை புது வழங்கிவருகிறார். இந்தநிலையில் அவர் சமூக வலை தளங்களில் தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனையே அவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகிறார்கள்.