மகேஸ்வரி வெளியேறிய நிலையில் அவரை ஓவர் டேக் செய்யும் அளவிற்கு வைல்ட் காடு என்ட்ரி கொடுக்கும் பிரபலம்.! டிஆர்பிக்காக பிக்பாஸ் போட்ட பிளான்..

vj-maheshwari
vj-maheshwari

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் ஆறாவது நிகழ்ச்சி மிகவும் விறுவிறுப்பாக சுவாரசியமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் 21 போட்டியாளர்களுடன் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சியில் தற்போது 17 போட்டியாளர்களுடன் மிகவும் சுவாரஸ்யமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிகழ்ச்சியில் இருந்த முதல் வார எலிமினேஷனில் சாந்தி வெளியேறினார்.

இதற்கு முன்பாக குழந்தை பிரிந்து இருக்க முடியாத காரணத்தினால் ஜி.பி முத்து பிக்பாஸை விட்டு வெளியேறினார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் அசல் கோளாறு, ஷெரினா இருவரும் வெளியேறினார்கள். இப்படிப்பட்ட நிலையில் இந்த வாரம் விஜே மகேஸ்வரி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேற இருக்கிறார். முந்தைய சீசன்களை விட இந்த சீசனில் விஜய் டிவி பிளான் போட்டு பல போட்டியாளர்களை களம் இறக்கியது.

அந்த வகையில் விஜே மகேஸ்வரியும் ஒருவர். மேலும் இதனைத் தொடர்ந்து தன்னுடைய பேச்சினால் ரசிகர்கள் மனதை கவர்ந்த விக்ரமன் ஊடகத்திலிருந்து தான் பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்துள்ளார். மேலும் இதனைத் தொடர்ந்து ஊடகத்துறையை சேர்ந்த விஜே பார்வதி வைல்ட் காடு என்ரியாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அறிமுகமாக கொடுக்க இருக்கிறார்.

இவர் இதற்கு முன்பாக ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த சர்வைவர் நிகழ்ச்சியில் பங்கு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் முழுக்க முழுக்க சோசியல் மீடியாவின் மூலம் தான் ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்துள்ளார் மேலும் இவருக்கு தொடர்ந்து மக்களுடன் தொடர்பு இருந்து வரும் நிலையில் பிக்பாஸ் வீட்டில் கலந்து கொள்ள இருக்கிறார்.

இவ்வாறு விஜே பார்வதியின் என்ட்ரி பொது மக்களுக்கு இடையே மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து வாயடைத்து வந்த மகேஸ்வரி பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் நிலையில் இவரை ஓவர் டேக் செய்யும் அளவிற்கு வைல்ட் கார்ட் என்ரியாக விஜே பார்ப்பதியை விஜய் டிவி அறிமுகப்படுத்த இருக்கிறது இதன் மூலம் இவர்களுடைய டிஆர்பியும் எக்கச்சக்கமாக எதிரும்.