விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்ந்து நாள்தோறும் விறுவிறுப்பாக பல சுவாரசியங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது இப்படிப்பட்ட நிலையில் ஒவ்வொரு வாரமும் மக்களின் வாக்குகளின் எண்ணிக்கையின் அடிப்படையில் ஏதாவது ஒரு போட்டியாளர் வாரத்தின் இறுதியில் வெளியேறுவது வழக்கம் அந்த வகையில் கடந்த வாரம் ஷெரீனா குறைவான வாக்குகளை பற்றி வெளியேறினார்.
இவர் வெளியேறியதற்கு முக்கிய காரணம் பிக்பாஸ் வீட்டில் விதிமுறைகளை மீறி அது தான் மேலும் மேலும் நடவடிக்கை சரியில்லாத காரணத்தினால் இவருக்கு குறைவான வாக்குகள் கிடைத்தது இதனை தொடர்ந்து இந்த வாரம் நாமினேஷனில் அசீம், விக்ரமன், ஆயிஷா, தனலட்சுமி, ராம், மகேஸ்வரி, ஏடிகே ஆகியவர்கள் இடம்பெற்று இருக்கிறார்கள்.
வழக்கம்போல் இந்த வாரமும் அசீம் மற்றும் விக்ரமன் இருவருக்கும் அதிகப்படியான ஓட்டுகள் கிடைத்துள்ளது அந்த வகையில் கடந்த வாரம் முதலிடத்தில் விக்ரமன் இரண்டாவது இடம் இருந்த நிலையில் அசீம் பெற்றிருந்த நிலையில் இந்த வாரம் அசீம் முதல் இடத்திலும் இரண்டாவது இடத்திற்கு விக்ரமன் தள்ளப்பட்டு இருக்கிறார். கமல் அறிவுரையின்படி அசீம் தன்மை மாற்றிக் கொண்ட நிலையில் ரசிகர்கள் இவருக்கு தங்களுடைய ஆதரவை அளித்து வருகிறார்கள்.
இவர்களைத் தொடர்ந்து ஆயிஷா, மகேஸ்வரி, தனலட்சுமி என அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர் கடைசி இடத்தில் ராம் மற்றும் ஏடிக்கே ஆகியவர்கள் இருக்கின்றனர். மேலும் இதில் ராம் மிகவும் குறைவான வாக்குகள் கிடைத்துள்ளது இவர் பெரிதாக பிக்பாஸ் டாஸ்க்களில் ஈடுபட்டு வராமல் மிகவும் அமைதியாக இருந்து வருகிறார் எனவே இவருக்கு குறைந்த அளவு வாக்குகள் கிடைத்துள்ளது.
தூங்குவதையும் வழக்கமாக வைத்திருக்கும் இவர் போட்டியாளர்கள், கமல், பிக்பாஸ் என அனைவரும் இவருக்கு அறிவுரை கூறியும் தற்போது வரையிலும் மிகவும் சோர்வாக இருந்து வருகிறார். இந்த வாரம் ராம் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறுகிறார். ஆனால் ராம் இந்த வாரம் மிகவும் சிறப்பாக விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.