தளபதி விஜய் தற்பொழுது நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து அடுத்ததாக தளபதி 66 திரைப்படத்தில் விஜய் நடிக்க இருக்கிறார். இந்த திரைப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக யார் நடிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அனைவரிடமும் இருந்து வருகிறது.
பொதுவாக விஜய்யுடன் நடிப்பதற்கு பல நடிகைகள் போட்டி போடுவார்கள் அதுமட்டுமில்லாமல் எப்படியாவது விஜய்யுடன் நடித்து விட வேண்டும் என பல நடிகைகள் காத்துக் கொண்டிருக்கிறார்கள். சினிமாவில் இருக்கும் பல பிரபலங்களுக்கும் ரசிகர்களுக்கும் விஜயின் திரைப்படம் வெளியானாளே கொண்டாட்டம்தான்.
பலரும் விஜயுடன் நடிக்க போட்டி போட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள் சமீபத்தில் கூட இரண்டு நடிகைகள் கவர்ச்சியாக நடிப்பதற்கு போட்டி போட்டுக் கொண்டார்கள் இந்தநிலையில் விஜயுடன் தெலுங்கு முன்னணி நடிகரான மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா தமிழ் சினிமாவில் அறிமுகமாக இருக்கிறார் ஆனால் இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
இருந்தாலும் மகேஷ்பாபுவின் மகள் சித்தாரா சர்க்காரு வாரி பாட்டா என்ற திரைப்படத்தின் மூலம் சினிமா உலகிற்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளார். இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில் இந்த திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள பாடலொன்றின் புரோமோ விடியோ நேற்று வெளியானது.
இந்த ப்ரோமோ வீடியோவில் சித்தாரா அறிமுகமாகி இருப்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மகேஷ் பாபுவின் மகள் நடனமாடிய ஒரு சில காட்சிகள் அந்த வீடியோவில் இருப்பதை காணமுடிகிறது இதன் முழு பாடல் தற்போது வெளியாகியுள்ளது இந்த நிலையில் தளபதி விஜய் 66 திரைப்படத்தில் விஜய்க்கு மகளாக மகேஷ் பாபுவின் மகள் சித்தாரா நடிக்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
இதன் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீடியோவை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்