உனக்கென்ன பைத்தியமா.. போயும் போயும் ரஜினியை ஹீரோன்னு சொல்ற… சூப்பர் ஸ்டாரையே வெறுத்த தயாரிப்பாளர்.. பின்பு நடந்ததுதான் அதிசயம்..

mullum malarum
mullum malarum

mullum malarum : மகேந்திரன் ஆரம்பத்தில் பத்திரிக்கை துறையில் துணை ஆசிரியராக பணியாற்றி வந்தார் அதன் பிறகு சிவாஜியின் தங்கப்பதக்கம் படத்தின் மூலம் திரைப்பட கதை வசனகர்த்தாக மாறினார். எழுத்தாளர் உமா சந்திரன் எழுதிய முள்ளும் மலரும் நாவல் அவரை மிகவும் கவர்ந்தது அந்த நாவலில் வரும் காளி கதாபாத்திரம் மகேந்திரனுக்கு மிகவும் பிடித்து விட்டது. அதனால் மகேந்திரன் அந்த கதாபாத்திரத்தை கதையாக உருவாக்கி மனதில் வைத்திருந்தார்.

அந்த சமயத்தில் தான் ஆனந்தி பிலிம்ஸ் பட அதிபர் வேணு செட்டியார் மகேந்திரனை தேடி வந்தார் அப்பொழுது ஒரு படத்தை தயாரிக்கலாம் என நினைக்கிறேன் என கூறினார் உன்னிடம் கதை இருந்தால் சொல் என மகேந்திரனை பார்த்து கேட்க மகேந்திரனும் முள்ளும் மலரும் பட கதையை கூறினார். அந்த கதையை கேட்டவுடன் செட்டியார் எனக்கு மிகவும் பிடித்து விட்டது இதுக்கு மேல் கதையே தேவையில்லை அண்ணன் தங்கச்சி கதை பிரமாதமாக இருக்கிறது உடனே ஆரம்பிக்கலாம் என மகிழ்ச்சியில் கூறினார்.

இந்த போட்டியாளரை காப்பாற்ற தான் விசித்ராவை எலிமினேஷன் செய்தீர்களா.? பிக் பாஸ் ஐ கிழித்து தொங்கவிடும் ரசிகர்கள்..

இந்த திரைப்படத்தை நீயே இயக்கு எனக் கூறியிருந்தார் பிறகு அண்ணன் கதாபாத்திரத்திற்கு யாரை போடலாம் என செட்டியார் கேட்ட பொழுது மகேந்திரன் உடனே ரஜினி காந்த் என்று கூறியுள்ளார். அதற்கு செட்டியார் உனக்கு என்ன பைத்தியமா நீ என்ன விளையாடுறியா வில்லனா நடிக்கிற ஆளை எப்படி ஹீரோவா போட முடியும் அதுவும் இல்லாம கருப்பா இருக்கிறார் வேண்டவே வேண்டாம் வேற யாராச்சும் சொல்லு என கூறியுள்ளார்.

ஆனால் மகேந்திரன் காளி கதாபாத்திரத்திற்கு பொருத்தமானவர் ரஜினி மட்டுமே அவரைத் தவிர வேறு யாரையும் என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை என்று உறுதியாக ஒற்றை காலில் நின்று உள்ளார். உடனே செட்டியார் உனக்கு ரஜினி நண்பன் என்பதால் நீ இப்படி அடம்பிடிக்கிறிய என்ன பத்தி கொஞ்சம் யோசிச்சு பாத்தியா என கேட்டுள்ளார்.

மகேந்திரனும் ரஜினியும் மிகவும் நெருங்கிய நண்பர்கள் அது அனைவருக்கும் தெரிந்த ஒன்று தான் ஆனால் மகேந்திரன் காளி கதாபாத்திரத்தில் ரஜினி மட்டுமே பொருத்தமாக இருப்பார் அவர் மட்டுமே நடிக்க வேண்டும் என ஒற்றை காலில் நின்று உள்ளார் ஒரு இயக்குனருக்கு தேவையானது முழு சுதந்திரம் அதையே என்னிடம் நீங்கள் கொடுக்கவில்லை அதனால் இந்த திரைப்படத்தை அப்படியே விட்டு விடலாம் இயக்குநர் ஸ்தானம் எனக்கு வேண்டவே வேண்டாம் நான் கதையை எழுதுகிறேன் என கூறிவிட்டார் மகேந்திரன்.

2023 – ல் நடிகர்களை ஓவர் டேக் செய்து நடிப்பில் பின்னி பெடலெடுத்த டாப் 3  வில்லன் நடிகர்கள்.! சாரே உங்க நடிப்பு பிரமாதம்

உடனே வேறு வழியில்லாமல் செட்டியார் சம்மாதித்தார் இருவரும் ரஜினியை சென்று பார்த்தார்கள் அங்கு மகேந்திரன் செட்டியாரை வீட்டிற்கு அனுப்பி விட்டு கதையை ரஜினியிடம் கூறியுள்ளார் உடனே ரஜினி ஆறவாரத்துடன் கதையைக் கேட்டுவிட்டு முள்ளும் மலரும் காளியாகவே மாறிவிட்டார்.

பின்னர் இதர கதாபாத்திரங்களை தேர்வு செய்து படத்தையும் உருவாக்கினோம் படத்தின் முதல் பிரதியை பார்த்துவிட்டு வெளியே வந்த செட்டியார் அடப்பாவி என் தலையில மண்ணள்ளி போட்டு விட்டியே என மகேந்திரனை பார்த்து கூறினார். படத்துல ஒரு வசனமும் இல்லை அங்க ஒன்னு இங்க ஒன்னு மட்டும் தான் இருக்கு இப்படியா படம் எடுத்து இருக்க என ஆவேசமாய் திட்டி தீர்த்து விட்டுப் போனார்.

அதேபோல் இளையராஜா முதன்முதலாக பின்னணி இசையின் ஆழமான ஞானத்தை வெளிப்படுத்தி நிரூபித்த முள்ளும் மலரும் படம் வெளியானது படம் வெளியாகி மூன்று வாரங்கள் மக்கள் கூட்டம் அமைதியாக படத்தைப் பற்றி எந்த கருத்தும் சொல்லாமல் வந்தார்கள் உடனே எப்படியாவது இந்த திரைப்படத்தை பிரபல படுத்த வேண்டும் என மகேந்திரனும் ரஜினியும் ஆசைப்பட்டார்கள் அப்பொழுது செட்டியாரிடம் சென்று மன்றாடினார்கள் இந்த படத்திற்கு பிரமோஷன் செய்ய வேண்டும் என கூறினார்கள்.

பொங்கல்ல நாங்க தான் கிங்.. டிஆர்பி எகிற வைக்க vijay tv யில் ஒளிபரப்பப்படும் புதிய திரைப்படங்கள்.! இதோ முழு லிஸ்ட்

உடனே செட்டியார் நல்ல படத்திற்கு பிரமோஷன் தேவையில்லை ஓடாத படத்திற்கும் பிரமோஷன் தேவையில்லை என கூறினார் நான்காவது வாரம் வந்தது அப்படியே தலைகீழாக மாறியது திரையரங்கிற்கு கூட்டம் அலைமோதியது அதுமட்டுமில்லாமல் பிளாக்கில் டிக்கெட்கள் விற்கப்பட்டது.

இதே நிலைமை நூறாவது நாளை எட்டியது உடனே செட்டியார் பிளாங்க் செக்கை எடுத்துக் கொண்டு வந்தார் எவ்வளவு வேண்டுமானாலும் எழுதிக் கொள் என கூறினார் உடனே செக்கை மீண்டும் கொடுத்துவிட்டு இதெல்லாம் தேவையில்லை ஒரு வித்தியாசமான படத்தை இயக்க வாய்ப்பு கொடுத்ததற்கு பல்லாயிரம் கோடிக்கு சமம் என கூறி செக்கை நீங்களே வைத்துக் கொள்ளுங்கள் என கூறினார்.. இப்படித்தான் முள்ளும் மலரும் திரைப்படம் வெளியாகி மாபெரும் ஹிட் அடித்தது.