தல அஜித் நடிப்பில் வெளிவந்த மங்காத்தா, தளபதி விஜய் நடிப்பில் வெளிவந்த ஜில்லா மற்றும் நடிகர் சிம்பு நடிப்பில் வெளிவந்த வந்தா ராஜாவா தான் வருவேன் போன்ற முன்னணி ஹீரோக்களின் பட வாய்ப்பை பெற்று சினிமாவின் பிரபலமடைந்தவர் நடிகர் மகத்.
இதன் மூலம் பிரபலமடைந்த இருந்தாலும் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் தான் பட்டிதொட்டியெங்கும் பிரபலமடைந்து ஒட்டுமொத்த ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தார்.
இந்நிகழ்ச்சியில் யாஷிகாவை காதலித்து வந்தார். அதுமட்டுமல்லாமல் சக போட்டியாளர்களிடம் எப்பொழுதும் சண்டை போடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். அந்த வகையில் நடிகை மும்தாஜ்யிடம் மிகவும் மரியாதைக் குறைவாக நடந்து கொண்டதால் ரெட் கார் கொடுத்து பிக்பாஸ் விட்டு வெளியேற்றி விட்டார்கள்.
இந்நிகழ்ச்சியின் போது மகத்தின் காதலியான பிராச்சி மிஸ்ரா மகாத்துடன் இருக்கும் காதலை முறித்துக் கொள்வதாக கூறி இருந்தார். ஆனால் மகத் நிகழ்ச்சிக்குப் பிறகு தனது காதலியை சமாதானப்படுத்தி கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவரின் திருமணத்தில் நடிகர் சிம்புவும் கலந்து கொண்டார்.
இந்நிலையில் மகத் நேற்று தனது முதலாவது திருமண நாளை கொண்டாடி உள்ளார். அதுமட்டுமல்லாமல் தற்பொழுது பிராச்சி மிஸ்ரா கர்ப்பமாக உள்ளார். மகத் இன்ஸ்டாகிராமில் நாங்கள் இருவரும் அழகிய குழந்தையால் ஆசீர்வதிக்கப் பட்டுள்ளோம். எங்கள் குழந்தை மே மாதம் வர உள்ளது என்று பதிவிட்டு தன் மனைவிக்கு முத்தம் கொடுத்து இருக்கும் நெகிழ்ச்சியான புகைப்படத்தை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்.
எனவே இப்புகைப்படங்களை பார்த்த ரசிகர்களும் மகத்திற்கு தங்களது வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள். இதோ அந்த புகைப்படம்.