மகாமுனி திரைப்படத்தில் முதலில் ஹீரோவாக நடிக்க வேண்டியது இந்த நடிகரா..? குட்டிக்கரணம் போட்டாலும் இவருக்கு அது செட்டே ஆகாது..!

magamuni
magamuni

mahamuni movie latest news: ஆரம்பத்தில் பல மக்கள் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருந்தாலும் தற்போது நடிக்கும் திரைப்படங்கள் அனைத்துமே சொதப்பலான கதையம்சம் உள்ளதால் தொடர்ந்து தோல்வியை சந்தித்து வருகிறார்.

அந்த வகையில் தன்னுடைய சினிமா கேரியரில் ரீ-என்ட்ரி கொடுக்கும் வகையில் அவருக்கு ஒரு வரப்பிரசாதம் போல அமைந்த திரைப்படம்தான் மகாமுனி இந்த திரைப்படம் பெருமளவிற்கு வசூலை பெறாவிட்டாலும் ரசிகர் மத்தியில் நல்ல விமர்சனத்தை பெற்று அவரது பெயரையும் புகழையும் சம்பாதித்துக் கொடுத்தது.

இவ்வாறு உருவான இந்த திரைப்படத்தை ஒரே ஒரு திரைப்படத்தை இயக்கிய இயக்குனர் சாந்தகுமார் தான் இயக்கி உள்ளார். இவர் மௌனகுரு திரைப்படத்திற்கு பிறகாக பத்து வருடம் ரெஸ்டில் இருந்து விட்டு அதன் பின்புதான் மகாமுனி திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

திரைப்படத்தின் இயக்குனர் இந்த திரைப்படத்தில் இடம் பெற்றுள்ள வசனங்கள் மற்றும் காட்சியின் மூலமாக ரசிகர்களை சிளுக்க வைத்தது மட்டுமல்லாமல் ஆர்யாவின் சினிமா வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது என்றால் இந்த திரைப்படத்தை கூறலாம்.

இப்படிப்பட்ட இந்த திரைப்படத்தில் முதலில் யார் நடிக்க இருந்தது தெரியுமா எப்பொழுதுமே திரை உலகில் ஜாலியாகவும் காமெடியாகவும் நடித்து வரும் ஜீவா தான். ஏனெனில் மகாமுனி திரைப்படமானது மிக சீரியஸான படம் என்பதால் நடிகர் ஜீவா இந்த திரைப்படத்தில் நடிக்க ஒப்புக் கொள்ளவில்லையாம்.

jeeva
jeeva

ஆனால் இந்த திரைப்படம் வெளிவந்து நல்ல விமர்சனத்தை பெற்ற உடன் நடிகர் ஜீவா இந்த திரைப்படத்தில் நடிக்காமல் விட்டதற்கு நான் இப்பொழுது வருத்தப்படுகிறேன் என தெரிவித்துள்ளாராம். அப்படியே நான் நடித்திருந்தாலும் ஆர்யா அளவிற்கு இந்த கதாபாத்திரம் யாருக்கும் பொருந்தாது என கூறியுள்ளார்.