பொதுவாக சினிமாவை பொருத்தவரை பெரும்பாலும் ஒருவரை திருமணம் செய்து கொண்டால் அவருடன் நான் வாழ வேண்டும் என்று அவசியம் இல்லை மேலும் அவர்களுக்கு பிடித்தவர்களுடன் வாழலாம் ஒரு சில பேர் லிவிங் டு கெதர் முறையில் இருந்து இருந்தார்கள் பிறகு இவர்களுக்கிடையே ஒத்துப் போகாத காரணத்தினால் பிரிந்து விடுகிறார்கள் இன்னும் சில பேர் திருமணம் செய்து கொண்டு குழந்தை பெற்றுக்கொண்டு பிடிக்கவில்லை என விவாகரத்து பெற்று பிரிந்தவர்களும் இருக்கிறார்கள்.
இது சினிமாவில் அடிக்கடி நடப்பது வழக்கமாக இருந்து வருகிறது அந்த வகையில் சின்னத்திரை நடிகை மகாலட்சுமி தற்பொழுது பிரபல தயாரிப்பாளர் ரவீந்தர் என்பவரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். நடிகை மகாலட்சுமி தொகுப்பாளராக பணியாற்றி வந்து பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த அரசி என்ற சீரியல் மூலம் சின்னத்திரை கதாநாயகியாக அறிமுகமாகியுள்ளார்.
இந்த சீரியலினை தொடர்ந்து ஏராளமான சீரியல்களில் வில்லியாகவும், ஹீரோயினாகவும் நடித்த பிரபலம் அடைந்துள்ளார். இப்படிப்பட்ட நிலையில் மேலும் இவர் சில திரைப்படங்களில் குறிப்பிட்ட கதாபாத்திரத்திடம் நடித்துள்ளார். இவ்வாறு பிசியாக இருந்து வந்த இவர் பிரபல தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார் மேலும் இந்த தம்பதியினர்களுக்கு சச்சின் என்ற ஒரு ஆண் குழந்தையும் பிறந்தது.
பிறகு இவர்கள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாட்டின் காரணமாக இருவரும் பிரிந்தார்கள் மகாலட்சுமி தன்னுடைய மகன் சச்சின் குழந்தையாக இருக்கும் பொழுதே தனியாக அழைத்து வந்து விட்டார் அந்த நேரத்தில் மகாலட்சுமியின் முதல் கணவர் என்னுடைய பையனை பார்க்க வேண்டும் என கதறி அழுத வீடியோ அப்பொழுது வைரலானது.
இதனை பெரிதாக பொருட்படுத்தாத மகாலட்சுமி தொடர்ந்து சீரியல்களில் நடித்து மிகவும் பிசியாக இருந்து வந்தார். இப்படிப்பட்ட நிலையில் சமீபத்தில் தயாரிப்பாளர் மற்றும் யூடியூப் பிரபலமான ரவீந்தரை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார் இவர்களுடைய திருமணம் திருப்பதி மிகவும் கோலாகலமாக நடைபெற்றது தற்பொழுது இந்த ஜோடிகளின் திருமணத்தை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.
எனவே அனைவருக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் இருவரும் பதில் அளித்து வருகிறார். அந்த வகையில் சமீப பேட்டி ஒன்றில் பல கேள்விகளுக்கு பதில் அளித்த மகாலட்சுமி தன்னுடைய முதல் கணவரை பற்றியும் கூறியுள்ளார். அதாவது எங்களுக்கு விவாகரத்தானவுடன் ஒரு வருடத்திலேயே அவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார் தற்பொழுது அவருக்கு என்ன ஒரு குடும்பம் இருக்கிறது.
ஆனால் நான் என்னையும் என்னுடைய பையனையும் பார்த்துக் கொள்ள நல்ல ஒருவரை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதற்காக காத்திருந்தேன் இந்த நேரத்தில் ரவீந்தர் போன்ற ஒரு நல்ல மனிதர் எனக்கு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது என கூறிவுள்ளார்.