சினிமாவைப் பொறுத்தவரை ஹீரோயின் அழகாக இருப்பதும் அவர் அழகில் ஹீரோ மயங்கி விழுவதும் வழக்கமான ஒன்றுதான். அப்படிதான் ஒவ்வொரு சினிமாவிலும் ஹீரோயினை ஹீரோ காதலித்து வருகிறார்கள். ஆனால் நிஜ வாழ்க்கையில் அப்படி கிடையாது நல்ல குணம் உள்ள நபர்களையும் நல்ல பாசமுள்ள மனிதர்களையும் தான் பெரும்பாலும் விரும்புகிறார்கள் அதிலும் இன்றைய இளம் தலைமுறையினர் அழகை பார்க்காமல் மனதை பார்த்து திருமணம் செய்து கொண்டு வருகிறார்கள்.
பொதுவாக சினிமாவை பொருத்தவரை ஒரு ஜோடி எப்படி இருக்கிறது என்பதை பார்த்து தான் திருமணம் செய்து கொள்கிறார்கள் ஆனால் தற்பொழுது ஒரு ஜோடியை பற்றி கவலைப்படாமல் நல்ல குணங்கள் உள்ள நபரை காதலித்து திருமணம் செய்து உள்ளார்கள் அவர்களைப் பற்றி தான் நாம் இப்ப பார்க்கப் போகிறோம் அவர்கள் வேறு யாரும் கிடையாது மகாலட்சுமி ரவீந்தர்தான். இவர்கள் இருவரும் மனதை புரிந்து கொண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
இருவருக்கும் இரண்டாவது திருமணம் என்றாலும் இவர்கள் முதல் திருமணம் போல் மிகவும் அழகாக வாழ்ந்து வருகிறார்கள் இவர்கள் ஜோடியை பலர் வாழ்த்தினாலும் ஒரு சிலர் உருவ கேளி செய்வதும் உண்டு ஆனால் அந்த விமர்சனங்களை எல்லாம் கண்டுகொள்ளாமல் தான் உண்டு தன் வேலை உண்டு என இருவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்கள் செப்டம்பர் 1ஆம் தேதி திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார்கள். மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வரும் இந்த தம்பதிகள் தற்பொழுது திருமணம் ஆகி நூறு நாட்களை கடந்துவிட்ட நிலையில் அழகாக புகை படம் ஒன்றை எடுத்துள்ளார்கள் அந்த புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து விட்டு ரவீந்தர் தன் மனதில் உள்ளதை பதிவிட்டுள்ளார்.
இதை பார்த்த ரசிகர்கள் நீங்கள் நீண்ட காலம் சந்தோஷமாக வாழ வேண்டும் என பலரும் வாழ்த்து கூறி வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் நீங்கள் இப்பொழுது இருப்பது போல் எப்பொழுதும் அன்புடன் காதலனாக இருக்க வேண்டும் எனவும் அறிவுரை கூறிய வருகிறார்கள் ரசிகர்கள்.