குழந்தை பெற்றுக்கொண்டால் மட்டுமே திருமணம் என ரவீந்தருக்கு கண்டிஷன் போட்ட மகாலட்சுமி.! அதற்கு காரணம் இதுதான்..

mahalakshmi
mahalakshmi

சீரியல் நடிகை மகாலட்சுமி மற்றும் தயாரிப்பாளர் ரவீந்தர் இருவருக்கும் சமீபத்தில் திருப்பதியில் மிகவும் கோலகாலமாக திருமணம் நடைபெற்று முடிந்தது. மேலும் இவர்கள் இருவருமே விவாகரத்திற்கு பிறகு இரண்டாவது திருமணம் செய்து கொள்வதால் மகாலட்சுமி குழந்தை பெற்றுக்கொள்ள வேண்டும் என்கின்ற கண்டிஷன் ஒன்றை போட்டுள்ளாராம் அதை பற்றிய தகவல் தற்பொழுது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

ஒரு வருடத்திற்கு மேலாக காதலித்து வருவதாக கூறும் மகாலட்சுமி மற்றும் ரவீந்தர் ஜோடி தற்பொழுது சோசியல் மீடியாவில் மிகவும் ஹிட்டாக இருந்து வருகிறார்கள் மேலும் பேசும் பொருளாக இருந்து வரும் இவர்கள் அனைத்திற்கும் பதிலளிக்கும் வகையில் தொடர்ந்து ஏராளமான பேட்டிகளில் கலந்து கொள்வதையும் வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.

இந்நிலையில் சமீப பேட்டி ஒன்றில் மகாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்து கொள்ளலாம் என முடிவு செய்த பொழுது உங்களுடன் நான் குழந்தை பெற்றுக் கொள்ள வேண்டும் வயது மற்றும் பிற காரணங்களை சொல்லிவிட கூடாது என்று கண்டிஷன் போட்டாராம் அதற்கு சம்மதம் தெரிவித்தால் மட்டுமே கல்யாணம் என கூறியுள்ளார்.பிறகு ரவீந்தரும் இதற்கு ஓகே சொல்லி மனப்பூர்வமாக சம்மதித்த பிறகு தான் இவர்களுடைய திருமணம் நடைபெற்றதாம் இதன் காரணத்தினால் அவர்களின் குடும்பத்தில் இருப்பவர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தார்கள் எனவும் கூறியுள்ளார்.

மேலும் இவ்வாறு ஒரு முடிவு எடுக்க மகாலட்சுமி உடைய மகன் சச்சின் தானாம். ஏனென்றால் இவருடன் படிக்கும் சக மாணவர்களுக்கு தம்பி, தங்கை இருக்கிறார்கள் அது போன்று எனக்கும் தம்பி, தங்கைகள் வேண்டுமென ஆசைப்படுகிறார்.எனவே இவருடைய ஆசையை நிறைவேற்றுவதற்காக இந்த முடிவை மகாலட்சுமி எடுத்துள்ளதாக கூறியுள்ளார். மேலும் இதற்கு பதில் அளித்த ரவீந்தர் மகாலட்சுமி இந்த முடிவு எடுத்தது எனக்கு மகிழ்ச்சி தான் மேலும் தலை தீபாவளிக்கு இன்டர்வியூ கொடுக்கும் பொழுது குழந்தைகளோடு தான் பேட்டி கொடுக்க வேண்டும் என முடிவு செய்துள்ளதாகவும் ஜாலியாக கூறியுள்ளார்.

பொதுவாக சினிமாவை பொறுத்தவரை நடிகைகள் தங்களுடைய அழகு குறைந்து விடும் என்பதற்காக வாடகை தாய் மூலம் குழந்தை பெற்றுக் கொள்வது வழக்கம் ஆனால் மகாலட்சுமி அப்படியெல்லாம் நினைக்காமல் இவ்வாறு கூறியது ரசிகர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது மேலும் மகாலட்சுமிக்கு தங்களுடைய வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.