“கனவிற்கும் அப்பாற்பட்டவள் மகாலட்சுமி” வர்ணித்த ரவீந்தர் – ரொமாண்டிக் புகைப்படம் இதோ.!

ravindar and mahalaxmi

இந்த ஆண்டு சினிமா பிரபலங்கள் பலரும் திருமணம் செய்து கொண்டனர். அதில் முக்கிய ஜோடியாக பார்க்கப்பட்டது விக்கி மற்றும் நயன்தாரா. இவர்களை தொடர்ந்து அடுத்து இந்த வருடத்தில் திருமணம் செய்து கொண்டதில் பிரபல ஜோடி என்றால் ரவீந்தர் மற்றும் மகாலட்சுமி தான். ஆம் தயாரிப்பாளரும் பேட்மேன் என்ற பெயரையும் கொண்ட ரவீந்தர் சின்னத்திரை சீரியல் நடிகை மகாலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

இருவருக்கும் இது இரண்டாவது திருமணம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த திருமணம் யாருக்கும் தெரியாமல் சைலண்டாக நடந்து முடிந்தது பின்பு ரவிந்தர் சோசியல் மீடியாவில் திருமண புகைப்படத்தை பதிவிட்டார். அந்தப் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகின தொடர்ந்து இருவரும் பல ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டும் பேட்டிகளை கொடுத்தும் ட்ரெண்டிங்கிலே இருக்கின்றனர்.

இருவரின் கல்யாணம் குறித்து பல விமர்சனம் வந்தது. அதற்கெல்லாம் இந்த ஜோடி சிரித்துக்கொண்டே எங்கள் கல்யாணத்திற்கு காதல் மட்டுமே காரணம் என்று கூறி வருகின்றனர். இதனிடையே இருவரும் மாறி மாறி பல ரொமான்டிக் புகைப்படங்களை வெளியிட்டு ட்ரெண்டிங்கிலே இருந்து வருகின்றனர் இப்போது கூட ரவிந்தர் சமூக வலைதள பக்கத்தில் இருவரும் இருக்கும் ரொமான்டிக் புகைப்படம்.

ஒன்றை வெளியிட்டு சில பதிவுகளையும் போட்டுள்ளார் அதில் அவர் கூறியது, மகாலட்சுமியுடன் வாழும் வாழ்க்கையை எப்படி வாழ போகிறேன் என்று நான் ஏற்கனவே கனவு கண்டதும் இல்லை, அவரை எப்படி மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள வேண்டும் என்பதை தான் யோசித்ததும் இல்லை என்று கூறி மகாலட்சுமியுடன் வாழ்வதற்கு கனவு அவசியம் இல்லை..

அவள் கனவுகளுக்கும் அப்பாற்பட்டவர் என்று குறிப்பிட்டுள்ளார். இதைப் பார்த்த அவர்களது ரசிகர்கள் திருமணமாகி சில மாதங்களை கடந்தும் இன்றும் இவ்வளவு அன்போடு இருக்கிறார்கள் இந்த ஜோடி எப்பொழுதும் இதே போல் அன்போடு இருக்க வேண்டும் என கூறி வாழ்த்தி வருகின்றனர்.

ravindar and mahalaxmi
ravindar and mahalaxmi