பல வெற்றி படங்களை கொடுத்துக் கொண்டிருக்கும் அருண் விஜய். தற்பொழுது நடித்து கொண்டிருக்கும் படம் மாஃபியா.இப்படத்தை துருவங்கள் பதினாறு படத்தை இயக்கிய கார்த்திக் நரேன் இந்த படத்தின் இயக்குனர் ஆவார்.மாஃபியா டிரைலர் வெளிவந்து மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது அதை தொடர்ந்து இப்படம் பிப்ரவரி 21 ரிலீசாகும் என அப்படகுழுவினர் தெரிவித்துள்ளனர்.
இப்படத்தில் அருண் விஜய் ஹீரோவாகவும் வில்லனாக பிரசன்னாவும் நடிக்கிறார். பிரசன்னா இதற்கு முன்பு அஞ்சாதே படத்தில் வில்லனாக நடித்திருந்தார். இதன் பிறகு மாபியா படத்தில் அவர் நடிக்கிறார். அருண் விஜய் கடைசியாக நடித்து வெளிவந்த படம் தடம் இதில் அவரது நடிப்பு பெரிதும் பேசப்படும் நிலையில் இப்பொழுது அவர் கமிட் ஆகியுள்ள படம் மாஃபியா இதுவும் மிகப்பெரிய அளவில் பேசப்படும் என பல ஊடகங்களில் தெரிவித்துள்ளார் அருண்விஜய்.
இப்படத்தின் இயக்குனரான கார்த்திக் நரேன் இதற்கு முன்பு நரகாசூரன் என்ற படத்தை இயக்கினார் இருந்த இப்படம் சுமார் 41 நாட்களிலேயே எடுக்கபட்டது.என்னினும் இப்படம் தயாரிப்பாளருக்கு இடையே பெரிய பிரச்சினை ஆனதால் இந்த படம் வெளிவராத நிலை ஏற்பட்டது.
இப்போது அவர் மாபியா படத்தை இயக்கி உள்ளார்.நரேன் கார்த்திகேயன் அவர்கள் குறுகிய காலத்தில் ஒரு படத்தை எடுக்கும் திறமை படைத்தவர் என மக்கள் இவரை பெரிதும் பாராட்டி வருகின்றனர். தயாரிப்பாளரான சுபாஷ்கரன் இந்த படத்தை தயாரித்து வருகிறார்.