விஜய் டிவியில் பொழுதுபோக்கிற்காக பல காமெடி நிகழ்ச்சிகள் வித்தியாசமான கான்செப்ட் உடன் நடத்தப்பட்டு வருகின்றன. அதில் பல நிகழ்ச்சிகள் ஹிட்டடித்து சீசன் சீசனாகவும் நடந்து வருகின்றன. அதில் குக் வித் கோமாளி, பிக்பாஸ், கலக்கப்போவது யாரு, ஸ்டார்ட் மியூசிக், மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை போன்ற பல நிகழ்ச்சிகள் மக்கள் மத்தியில் பிரபலமடைந்து.
சீசன் சீசனாக நடந்து வருகின்றன. இது போன்ற காமெடி நிகழ்ச்சியாக சில மாதங்களுக்கு முன்பு புதுவிதமாக தொடங்கப்பட்ட நிகழ்ச்சிதான் சூப்பர் டாடி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் விஜய் டிவி பிரபலங்கள் அவர்களது குழந்தைகளுடன் கலந்து கொண்டுள்ளனர்.
இதில் காமெடியாக பல டாஸ்குகள் கொடுக்கப்படும் அதில் அப்பாக்கள் அல்லது குழந்தைகள் மாறி மாறி பதில் சொல்ல வேண்டும். அப்படி சரியாக பதில் சொல்லவில்லை என்றால் சில சின்ன சின்ன பனிஷ்மெண்ட் வழங்கப்படும். தற்போது மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று சிறப்பாக ஒளிபரப்பாகி வரும்.
இந்த நிகழ்ச்சியில் குறைந்த மதிப்பெண்களை பெற்று வாரம் வாரம் ஒரு போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவார்கள். அப்படி சிறப்பாக நடைபெற்ற இந்த நிகழ்ச்சி தற்போது பைனல்ஸ் வரை வந்துள்ளது. மேலும் இந்த வாரம் சூப்பர் டாடி நிகழ்ச்சியின் கிராண்ட் பினாலே நடைபெற உள்ளது. இந்த நிலையில் கிராண்ட் பினாலே நிகழ்ச்சியின் புரோமோ வெளியாகி உள்ளது.
அதில் மதுரை முத்து தனது மனைவி இல்லாமல் குழந்தைகளை வளர்க்க ரொம்ப கஷ்டப்பட்டேன் என கண்ணீர் மல்க கூறியுள்ளார். அதைக்கேட்டு அங்குள்ள பிரபலங்கள் அனைவரும் சோகத்திற்கு உள்ளாகினர். இதோ அந்த ப்ரோமோ வீடியோ.