அரண்மனை போல் கெஸ்ட் ஹவுஸ் கட்டிய மதுரை முத்து.! எல்லாத்துக்கும் காரணம் விஜய் டிவி தான்…

madurai-muthu
madurai-muthu

தனது நகைச்சுவையான திறமையின் மூலம் பிரபலமானவர் மதுரை முத்து. இவர் சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பிரபலம் ஆகி இருந்தாலும் இவருக்கு கை கொடுத்து உதவி செய்தது விஜய் டிவி தான் அந்த அளவிற்கு சின்னத்திரையில் இருந்து விஜய் டிவிக்கு வந்து தனது நகைச்சுவை திறமையின் மூலம் பல சாதனைகளை படைத்து வருகிறார் மதுரை முத்து.

அதுமட்டுமல்லாமல் மதுரை முத்து அவர்கள் சில நிகழ்ச்சிகளில் நடுவராகவும் இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இதனைத் தொடர்ந்து மதுரை முத்து அவர்கள் ஒரு சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் ஆனால் இவர் நடித்துள்ள திரைப்படங்களில் இவருக்கு சிறிய கதாபாத்திரம் மட்டும் தான் கிடைத்தது விரைவில் இவருக்கு வெள்ளித்திரையில் பெரிய வாய்ப்பு கிடைக்க வேண்டும் என பல போராட்டங்கள் நடத்தி வருகிறார்.

இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருந்த குக் வித் கோமாளி நிகழ்ச்சி மிகப்பெரிய அளவில் பிரபலமானது அதில் முதல் சீசனிலும் பங்கேற்றுள்ளார் இரண்டாவது சீசனிலும் பங்கேற்று உள்ளார் மதுரை முத்து. குக் வித் கோமாளி மூலம் புகழ், பாலா என பல நகைச்சுவை நடிகர்கள் சினிமாவில் நுழைந்து உள்ளார்கள் ஆனால் இதில் இன்னொருவரும் பிரபலமாகியுள்ளார் அவர்தான் மதுரை முத்து.

இப்படி அடுக்கடுக்காக வைத்துக் கொண்டே போகலாம் மதுரை முத்துவின் ஸ்டண்ட் அப் காமெடிக்கு இணையாக யாரும் இல்லை என்று. இப்படி தனது  நகைச்சுவை திறமையின் மூலம் பிரபலமான மதுரை முத்து தற்போது ஒரு பிரம்மாண்ட கெஸ்ட் ஹவுஸ் ஒன்றை கட்டியுள்ளார். அது மட்டுமல்லாமல் அந்த கெஸ்ட் ஹவுசை வீடியோ எடுத்து தனது youtube சேனலில் போட்டு உள்ளார்.

அதுமட்டுமல்லாமல் மதுரை முத்து கெஸ்ட் ஹவுஸ் சுற்றிக் காண்பிக்கும் போது சில நகைச்சுவை பேச்சுக்களையும் கூறியிருந்தார் இந்த வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

இதோ அந்த வீடியோ.