மதுரை முத்து சமீபத்தில் தன்னுடைய முதல் மனைவி பற்றி யாரிடமும் கூறாத ஒரு விஷயத்தை சமீப பேட்டி ஒன்றில் கூறியுள்ள நிலையில் தற்போது அந்த தகவல் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. தன்னுடைய நகைச்சுவையான பேச்சுத் திறமையின் மூலம் ரசிகர்களை கவர்ந்து மக்கள் மத்தியில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் மதுரை முத்து.
இவர் சின்னத்திரையில் ஏராளமான நிகழ்ச்சிகளில் பங்கு பெற்று வருகிறார் போட்டியாளராகவும், தொகுப்பாளராகவும், நடுவராகவும் பணியாற்றி வரும் இவருக்கு நல்ல மவுசு இருந்து வருகிறது. இப்படிப்பட்ட நிலையில் இவருடைய எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்து விடுவார். அந்த வகையில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு எந்த அளவிற்கு கலகலப்பாக கொண்டு சென்றான் என்பது நாம் அனைவருக்கும் தெரியும்.
இவ்வாறு தன்னுடைய பேச்சு திறமையினால் மட்டுமே சின்னத்திரையில் இந்த அளவிற்கு பிரபலம் அடைந்துள்ளார் மேலும் இவர் சிறந்த பட்டிமன்ற பேச்சாளர் என்பதும் பல பட்டிமன்றங்களில் இவர் நடுவராகவும் இருந்துள்ளார் மேலும் இவருடைய காமெடி தமிழ் மக்களை எப்பொழுதும் சிரிக்க வைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் இவருடைய மொக்க காமெடியாக இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தற்போது மதுரை முத்துவின் முதல் மனைவியை பற்றிய தகவல் தற்பொழுது வெளியாகி உள்ளது அதாவது மதுரை முத்து ரேகா என்பவரை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். இப்படிப்பட்ட நிலையில் திடீரென்று கடந்த 2016ஆம் ஆண்டு கார் விபத்து ஒன்றில் உயிரிழந்தார் ரேகா. எனவே முதல் மனைவி ஏற்கனுமே திருமணமாகி குழந்தையுடன் இருந்தவர் என்றும் அவரது கணவர் அவரை விட்டுவிட்டு சென்று விட்டதால்தான் அவரை திருமணம் செய்து கொண்டதாகவும் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு இந்த விஷயம் இதுவரையிலும் யாருக்கும் தெரியாது என்றும் முதன்முறையாக தற்பொழுது கூறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இவ்வாறு இவருடைய முதல் மனைவி மரணத்திற்கு பிறகு மனைவியை நெருங்கிய தோழி நீத்து என்ற பல் டாக்டரை மதுரை முத்து திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.