உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த மிகப்பெரிய வெற்றியை பெற்று வரும் திரைப்படம்தான் விக்ரம். இத்திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா மிகப்பெரிய வெற்றியை சந்தித்துள்ளது. மேலும் கோலிவுட்டை மற்ற திரைவுலகினர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ளது.
இப்போது தமிழ் சினிமாவில் கமலஹாசன் மற்றும் விக்ரம் திரைப்படத்தை தான் பெரிதளவில் கொண்டாடி வருகின்றனர். இத்திரைப்படத்தினை பார்த்து விட்டு வரும் ரசிகர்கள் மீண்டும் மீண்டும் இத்திரைப்படத்தினை பார்க்கும் போது ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு அனுபவம் புதிதாக கிடைப்பதாக தெரிவித்து வருகின்றனர்.
இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், விஜய், சேதுபதி பகத் பாஸில் ஆகிய மூவருக்கும் போட்டி போட்டுக்கொண்டு எடுத்துள்ளார்கள். மேலும் இத்திரைப்படத்தின் சின்ன கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் கூற அவர்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அந்த வகையில் விக்ரம் திரைப்படத்தில் ஒரே ஒரு காட்சியில் நடித்து பிரபலமடைந்த உள்ளவர்தான் நடிகை மாயா கிருஷ்ணன். இவை மதுரை பொண்ணு என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தில் இவர் பகத் பாசில் மற்றும் கமலஹாசனுடன் ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடித்திருந்தார்.
அந்த ஒரு காட்சியில் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமடைந்து உள்ள நிலையில் அந்த ஒரு காட்சியின் மூலம் தற்போது சோசியல் மீடியாவில் இவரைப் பற்றியும் பாராட்டி வருகிறார்கள். நடிகை மாயா கிருஷ்ணன் தனுஷ் நடிப்பில் வெளிவந்த “தொடரி”, சிவகார்த்திகேயனுடன் வேலைக்காரன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
இந்த திரைப்படங்களை விடவும் விக்ரம் திரைப்படத்தில் இவர் நடித்து வந்த ஒரு காட்சிதான் அவரை எங்கேயோ கொண்டு சென்றுள்ளது. மேலும் இவர் ‘சர்வர் சுந்தரம்’ ‘ துருவ நட்சத்திரம்’ ஆகிய திரைப்படங்களில் நடித்து முடித்துள்ளார் இந்தத் திரைப்படங்களின் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.