பொதுவாக ஒரு பள்ளிக்கூடம் மிகவும் சிறந்த பள்ளிக் கூடமாக விளங்கினாலும் அதில் ஒரு சில ஆசிரியர்கள் செய்யும் தவறினால் அந்த பள்ளியின் மொத்த பெயரும் வீணாகிவிடும். அந்த வகையில் அந்தப் பள்ளிக்கூடத்தை மிகப்பெரிய அளவில் வளர்ப்பதற்கு பல வருடங்கள் கஷ்டப்பட்டு இருந்திருப்பார்கள்.
ஆனால் அந்த பள்ளியில் வேலைக்கு வரும் சில ஆசிரியர்கள் செய்யும் தவறினால் பலரும் அந்தப் பள்ளிக்கூடத்தில் தங்களது குழந்தைகளை படிக்க வைப்பதற்கு பயப்படுவார்கள் பெற்றோர்கள். அந்த வகையில் ஒரு பள்ளிக்கூடம் தான் சென்னையில் உள்ள பிஎஸ்பிபி. இந்த பள்ளிக்கூடத்தில் பணியாற்றி வரும் வணிகவியல் ஆசிரியர் ஒருவர் மாணவிகளிடம் மிகவும் மோசமாக நடந்துகொண்டதாக மாணவிகள் போலீசாரிடம் புகார் அளித்துள்ளார். அந்த புகாரில் சங்கடப் படுத்தும் வகையில் பல தவறான கேள்வி கேட்டதாகவும், ஆன்லைன் வகுப்புகள் வெறும் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு வகுப்பு எடுத்ததாகவும் கூறியுள்ளார்கள்.
எனவே போலீசார் புகாரின் பெயரில் ஆசிரியர் ராஜகோபாலன் கைது செய்துள்ளார்கள். விசாரணையில் ராஜகோபாலன் கடந்த 5 வருடங்களாக இதேபோல் மாணவிகளிடம் தொடர்ந்து நடந்து வருவதாக கூறியுள்ளார். எனவே இதன் காரணமாக பலர் பிஎஸ்பிபி பள்ளியை மிகவும் தவறாக விமர்சித்து வருகிறார்கள்.
எனவே தற்பொழுது மதுவந்தி வீடியோ ஒன்றை சமீபத்தில் வெளியிட்டு உள்ளார். இந்தப் பள்ளிக்கூடத்தில் ராஜகோபாலன் ஒரு ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அந்த வகையில் அவர் செய்தது மிகவும் மன்னிக்க முடியாத தவறு அதற்கு அவருக்கு தக்க தண்டனை கொடுக்க வேண்டும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ஒட்டுமொத்த சமூக வலைதளங்களும் பிஎஸ்பிபி பள்ளிக்கூடத்தை பற்றி தான் தவறாக எழுதி விமர்சித்து வருகிறார்கள்.
என் பாட்டி திருமதி ஒய்ஜிபி இரத்தம் சிந்தி, வியர்வை சிந்தி உழைத்து வளர்த்த விட மிகப்பெரிய கல்விக்கூடம். இது அவங்க பேருக்கோ இல்லை அந்த பள்ளியின் மரபுக்கோ எந்த களங்கமும் வரக்கூடாது அப்படி வந்தால் நாங்கள் அதனை பார்த்துக்கிட்டு சும்மா இருக்க மாட்டோம் அது என்னுடைய பள்ளி தான் நான் அங்கு தான் படித்தேன் ஆனால் இந்த பள்ளியை நானோ இல்லை என் அப்பாவோ நடத்தவில்லை என்று கூறி உள்ளார்.
அதோடு முக்கியமாக இதற்கு முன்பு ஒரு பேட்டியில் கூட இவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான் கூட இந்தப் பள்ளியில்தான் படித்தார் இப்பொழுது அவர் எந்த நிலைமையில் இருக்கிறார் என்று கூறியிருந்தார் மதுவந்தி. இவ்வாறு மிகவும் கோபமாகவும், ஆக்ரோஷமாகவும் பேசி உள்ள மதுவந்தி தன் மகன் பிஎஸ்பிபி பள்ளியில் படிக்காமல் ஊட்டியில் உள்ள Good Shepherd international school-லில் ஏன் படிக்க வைத்து வருகிறார் என்று ரசிகர்கள் கூறி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்கள்.