தமிழ் சினிமாவில் முதன்முதலில் அழகன் என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் மது பாலா தனது முதல் திரைப்படத்திலேயே ஒட்டுமொத்த ரசிகர்களையும் தனது பக்கம் இழுத்தவர், அதனால் இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் குவிய ஆரம்பித்தது இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வந்தவர்.
மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகிய ரோஜா என்ற திரைப்படத்தின் மூலம் ஒட்டுமொத்த திரையுலகின் கவனத்தையும் தனது பக்கம் திருப்பியவர் இதனை தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் அர்ஜுனுக்கு ஜோடியாக நடித்த ஜென்டில்மேன் திரைப்படத்தில் இவரின் நடிப்பு அனைவராலும் பாராட்டப்பட்டு பேரும் புகழும் பெற்று கொடுத்தது.
நடிகையாக வலம் வரும்பொழுது இவர் 1999 ஆம் ஆண்டு ஆனந்தா ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார், அதன்பின் படத்தில் நடிப்பதை முற்றிலுமாக நிறுத்திவிட்டார், கடைசியாக தமிழில் அக்னிதேவி வாயை மூடி பேசவும் ஆகிய திரைப்படங்களில் நடித்திருந்தார்.
மதுபாலாவுக்கு 2 மகள்கள் இருக்கிறார்கள் ஒருவர் பெயர் அமேயா இன்னொரு பெயர் கையா இவர்கள் இருவரும் அழகில் அம்மாவை மிஞ்சும் அளவிற்கு சமூக வலைதளத்தில் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்கள் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.
அழகாக இருக்கும் மதுபாலாவின் மகள்களின் புகைப்படங்களை பார்க்கும் பொழுது நெட்டிசன்கள் என்னது இது மதுபாலா மகளா என ஆச்சரியம் அடைகிறார்கள்.