தென்னிந்திய திரைப்பட நடிகையாக வலம் வருபவர் மதுபாலா இவர் மலையாளம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் நடித்து வந்தார் பழம்பெரும் இந்தி திரைப்பட நடிகை மதுபாலாவின் நினைவாக பெற்றோர்கள் அவருக்கு இந்த பெயரை சூட்டினார்கள். 1972 மார்ச் மாதம் பிறந்த இவர் 1999இல் ஆனந்த் ஷா என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவர் அர்ஜுன், பிரபு தேவா, பிரபு, மிதுன், சக்கரவர்த்தி, அக்ஷய்குமார், மம்முட்டி மோகன்லால், அசோக்குமார், தேவ் ஆனந்த், என பல முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்துள்ளார். மதுபாலா முதன்முதலில் திரையுலகில் மலையாள திரைப்படத்தின் மூலம்தான் அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து தமிழ் திரைப்படமாக அழகன் என்ற திரைப்படத்தில் நடித்தார்.
ஆனால் இவருக்கு தமிழில் பெயரை பெற்றுக்கொடுத்த திரைப்படம் என்றால் மணிரத்னம் இயக்கத்தில் வெளியாகிய ரோஜா திரைப்படம் தான் இந்த திரைப்படத்திற்கு பிறகு மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். ரசிகர்களை தனது அழகாலும் தனது நடிப்பாலும் கட்டிப் போட்டார் இதனைத் தொடர்ந்து சங்கர் இயக்கத்தில் வெளியாகிய ஜென்டில்மேன் என்ற திரைப்படத்தில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
இப்படி அடுத்தடுத்த படம் இவருக்கு ஹிட் அடித்ததால் 90 காலகட்டத்தில் கொடிகட்டி பறக்கும் பிசியான நடிகையாக மாறினார் ஆனால் ஒரு கால கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார் தற்போது இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கிறார்கள் தனது குடும்ப வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்து வரும் மதுபாலா தன்னுடைய மகன்களான அமேயா, கீயா ஆகியோர்களுடன் புகைப்படம் எடுத்து தன்னுடைய சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அம்மாவை விட ஒரு படி மிகவும் அழகாக இருக்கிறீர்கள் என கமெண்ட் செய்துள்ளார்கள்.