மாதவன் போட்ட ஒரே ஒரு ட்விட்டால் மிரண்ட திரையுலகம்.! மேடின்னா சும்மாவா.?

madhavan
madhavan

முன்னணி நடிகராக தொடர்ந்து நடித்து சாக்லேட் பாயாக ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்து தற்பொழுது தொடர்ந்து திரைப்படங்கள் இயக்குவதிலும் அதிகம் கவனம் செலுத்தி வருபவர் தான் நடிகர் மாதவன் தற்போது இவருடைய இயக்கத்தில் ராக்கெட்ரி வெளியானது. வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றது மேலும் இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணனின் வாழ்க்கை உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த கதை ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.

இவருடைய பெரும் முயற்சி வெளிப்படும் நிலையில் ஜூலை ஒன்றாம் தேதி அன்று தமிழக முழுவதும் ரிலீஸ் ஆனது மேலும் தியேட்டர் உரிமையை தமிழகத்தில் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றி வெளியிட்டது.மேலும் திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றது. இவ்வாறு இந்த திரைப்படம் உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டதால் இயல்பாக ரசிகர்கள் வரவேற்பை பெற்றது.

மேலும் திரைபிரபலங்களும் இவருடைய திரைப்படத்தை பார்த்துவிட்டு தங்களுடைய வாழ்த்துக்களை கூறியுள்ளார்கள் அந்த வகையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ராக்கெட்ரி திரைப்படத்தை பார்த்து விட்டேன் நடிகர் மாதவன் மற்றும் நம்பி நாராயணன் பட குழுவினர் உள்ளிட்டோரை நேரில் அழைத்து பாராட்டிவுள்ளார். முதன்முறையாக இயக்குனராக சினிமாவிற்கு அறிமுகமாகியுள்ள மாதவனுக்கு இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றோர்களால் திரை பிரபலங்கள் இவருக்கு வாழ்த்துக்களை கூறி வருகிறார்கள்.

மேலும் இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன்காக பெரும் முயற்சியை எடுத்துள்ளார் அவர் அவரின் தொடர் முயற்சியின் காரணமாக படம் பெரும் வெற்றியைப் பெற்றது தமிழ் தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் ராக்கெட் நல்ல வசூல் வேட்டையை நடத்திய ஹிட்டாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் நடிகர் மாதவன் ராக்கெட்ரி  திரைப்படத்தை உருவாக்குவதற்காக தன்னுடைய வீட்டை அடமானம் வைத்ததாக செய்திகள் தீவிரமாக பரவி வந்தது.

மேலும் இது மாதவனின் கவனத்திற்கு சென்ற நிலையில் அதற்கு பதில் அளித்த இவர் தன்னுடைய வீட்டையெல்லாம் இழக்கவில்லை என தெரிவித்துள்ளார். இப்பொழுது என் வீட்டில் தான் இருக்கிறேன் என கூறியுள்ளார் இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படம் நல்ல வரவேற்பினை பெற்றதால் இந்த படத்தில் பணியாற்றியவர்கள் இந்த ஆண்டு அதிக வருமான வரி கட்டுவார்கள் என்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளார் மாதவனின் பதிவு தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.