தமிழ் சினிமாவில் பெண் ரசிகர்களை பெருமளவு கவர்ந்த நடிகர் என்றால் மாதவனை குறிப்பிட்டு சொல்லலாம். இவ்வாறு பிரபலமான நமது நடிகர் மாதவனை அனைவரும் செல்லமாக மேடி என்றுதான் அழைப்பார்கள் இவர் நடிப்பில் வெளியான மின்னலே, கன்னத்தில் முத்தமிட்டால், ஆயுத எழுத்து, இறுதிசுற்று, விக்ரம் வேதா ஆகிய திரைப்படங்கள் இவருடைய வாழ்க்கையில் ஒரு மைல் கல்லாக அமைந்தது.
இவர் தமிழ் மொழி மட்டுமில்லாமல் இந்தியிலும் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார் இந்நிலையில் நமது நடிகர் சினிமாவில் சூட்டிங்கிற்காக தனி விமானத்தில் பயணம் சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படம் சமூக வலைதளப் பக்கத்தில் மிகவும் வைரலாக பரவி வருகிறது.
இந்நிலையில் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம் வந்து கொண்டிருப்பவர் தான் மஞ்சுவாரியர் மலையாள சினிமா மட்டுமில்லாமல் தமிழ் மொழியிலும் சில திரைப்படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.
இந்நிலையில் இவர் பிரபல அறிமுக இயக்குனர் கல்பேஷ் இயக்கத்தில் ஹிந்தியில் அமேரிக்கி பண்டிட் என்ற திரைப்படத்தில் மாதவனுக்கு ஜோடியாக நடிக்க உள்ளார் இத் திரைப்படமானது ஊரடங்கு போடுவதற்கு முன்பாகவே போபாலில் மிக விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடத்தப்பட்ட நிலையில் தற்போது துபாயில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் அந்த படப்பிடிப்பு தளத்திற்கு செல்வதற்காக மாதவன் பயணிகள் யாரும் இல்லாத விமானம் ஒன்றில் பயணம் செய்துள்ளார். அந்த வகையில் ஒரு பக்கம் யாரும் இல்லாமல் பயணம் செல்வது எனக்கு புதிதாக இருந்தாலும் இது மிக சோகமாக இருக்கிறது என்ற ஒரு பதிவினையும் வெளியிட்டுள்ளார்.
madhavan pic.twitter.com/XCF7cXf1wN
— Tamil360Newz (@tamil360newz) August 14, 2021