சூரரை போற்று திரைப்படத்தில் நடிகர் சூர்யா செய்த செயலால் கதறி அழுத மேக்கப்மேன் – பல நாள்கள் கழித்து வெளிவந்த உண்மை.

surya
surya

சினிமா உலகில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய மக்கள் மற்றும் ரசிகர்களை மகிழ்வித்து வருபவர் நடிகர் சூர்யா. இவரது ஒருசில படங்கள் தொடர் தோல்வியை கொடுத்திருந்தாலும் துவண்டுவிடாமல் மக்கள் மற்றும் ரசிகர்களை கவரும்படி என படங்களை கொடுத்துக் கொண்டுதான் வருகிறார்.

இப்பொழுது கூட இவர் நடிப்பில் வெளியான ஜெய் பீம் திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு  வெற்றியை கொடுத்து வருவதால் படக்குழு மற்றும் நடிகர் சூர்யா சந்தோஷத்தில் இருக்கிறார் இருப்பினும் ஒரு தரப்பு மக்கள் இவரை விமர்சித்து வருகின்றனர் ஏனென்றால் ஜெய்பீம் படத்தில் ஒரு சில காட்சிகள் ஒரு தரப்பினருக்கு பிடிக்காமல் இருப்பதால் அது தற்போது பெரிய விவாதத்தில் ஆரம்பித்துள்ளது.

இப்படியிருக்க இவர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் அடித்த திரைப்படம் சூரரைப்போற்று இந்த திரைப்படத்திலிருந்து ஒரு சூப்பரான தகவல் ஒன்று தற்போது இணையதளத்தில் உலா வருகிறது இந்த படத்தில் எழுத்தாளராக பணியாற்றியவர் சந்திரா தங்கராஜ் தனது சமூக வலைத்தளத்தில் ஒரு செய்தியை வெளியிட்டுள்ளார் அதில் அவர் கூற வருவது :

சூரரைப்போற்று திரைப்படத்தின் போது ஒரு குழந்தைக்கு எதிர்பாராதவிதமாக தவறாக மேக்கப் போட்டுவிட்டார் மேக்கப் மேன். அது ஒரு கட்டத்தில் ஆபத்தாக இருக்கும் இதை உணர்ந்து கொண்ட நடிகர் சூர்யா உடனே அங்கு வந்து மேக்கப் மேனை பார்த்து கொஞ்சம் குரலை உயர்த்தி பேசினார்.

இதனால் அந்த மேக்கப் மேன் அதிர்ச்சியாகி விட்டார் மறுநாள் ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு வந்தவுடன் நேராக  சூர்யா சென்று நான் பேசியது தவறு எனக் கூறி அவரிடம் மன்னிப்பு கேட்டார் மேக்கப்மேன் சற்றும் எதிர்பார்க்காததால் அழுதுவிட்டார் இதை சந்திரா தனது சமூக வலைதளப் பக்கத்தில் சொல்லி புகழ்ந்துள்ளார். மேலும் #westandwithsurya வுக்கு ஆதரவாக தெரிவித்துள்ளார்