Maaveeran movie : தமிழ் சினிமாவில் இன்று முன்னணி ஹீரோவாக வருபவர் சிவக்கார்த்திகேயன் இவர் திரையுலகில் குறைந்த படங்களில் நடித்திருந்தாலும் அதில் பெரும்பாலான படங்கள் வெற்றி படங்கள் என்பதால் அவருடைய மார்க்கெட் உச்சத்தில் இருப்பதோடு மட்டுமல்லாமல் இவருக்கென மிகப்பெரிய ஒரு ஃபேன் பேஸ் இருக்கிறது.
இவர் நடிப்பில் கடைசியாக வெளியான பிரின்ஸ் திரைப்படம் கலைவையான விமர்சனத்தை பெற்று சுமாராக ஓடியது. இருபின்னும் நல்ல கம் பேக் கொடுக்க சிவகார்த்திகேயன் இளம் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் கைகோர்த்து மாவீரன் திரைப்படத்தில் நடித்தார் இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து இளம் நடிகை அதிதி ஷங்கர்..
பிரபல காமெடி நடிகர் யோகி பாபு, சரிதா, சுனில், மிஷ்கின் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்திருந்தனர். படம் வெளிவந்து மக்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று தொடர்ந்து வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது வெகு விரைவிலேயே OTT தளத்திலும் வெளியாகி மக்களை சந்தோஷப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் சிவகார்த்திகேயன் நடித்த மாவீரன் திரைப்படம் வெளியாகி 25 நாட்களை கடந்துள்ளது இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து நமக்கு தகவலும் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் மாவீரன் திரைப்படம் வெளியாகி இதுவரை சுமார் 89 கோடி வரை வசூலித்து உள்ளதாக கூறப்படுகிறது.
இதன் மூலம் 40 கோடி மாவீரன் படக்குழுவுக்கு லாபத்தை கொடுத்திருப்பதாக தெரிய வருகிறது இதனால் சிவகார்த்திகேயனும் சரி படகுழுவும் சரி செம்ம சந்தோஷத்தில் இருந்து வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து பல்வேறு புதிய படங்களில் சிவகார்த்திகேயன் ஒப்பந்தமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.