maaveeran : நடிகர் சிவகார்த்திகேயன் கமர்சியல் படங்களில் நடித்து வெற்றிகளை அள்ளி வருகிறார். அந்த வகையில் பிரின்ஸ் படத்தை தொடர்ந்து மடோன் அஸ்வின் உடன் முதல் முறையாக கூட்டணி அமைத்து மாவீரன் திரைப்படத்தில் நடித்திருந்தார் படத்தில் அவருடன் இணைந்து சரிதா, மிஷ்கின், அதிதி ஷங்கர், சுனில்..
உள்பட பலர் நடித்திருந்தனர் படத்தின் பாடல், டிரைலர், இசை வெளியீட்டு விழா போன்ற அனைத்துமே படத்திற்கான எதிர்பார்ப்பை அதிகரிக்க வைத்திருந்த நிலையில் படம் நேற்று கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது. மாவீரன் படம் சொல்ல வருவது என்னவென்றால் அநியாயத்தை எதிர்த்து ஹீரோ போராடுகிறார் அதில் ஜெயித்தாரா இல்லையா என்பதுதான் படத்தின் கதை..
படத்தில் காமெடி, ஆக்க்ஷன், சென்டிமென்ட் என அனைத்தும் அற்புதமாக இருந்ததால் மாவீரன் படம் பலருக்கும் பிடித்து போய் உள்ளது. இதனால் படத்தை பார்க்க பலரும் போட்டி போட்டுக் கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் நேற்று வெளியான மாவீரன் திரைப்படம் முதல் நாள் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி மாவீரன் படத்தின் முதல் நாள் வசூல் சுமார் 8 கோடியில் இருந்து 10 கோடி வரை வசூல் செய்திருக்கும் என கூறப்படுகிறது. குறிப்பாக தமிழகத்தில் மட்டும் இந்த திரைப்படம் 6 கோடியிலிருந்து 8 கோடி வரை வசூல் செய்திருக்கும் என சொல்லப்படுகிறது.
வெளிநாடுகளில் மொத்தமாக 2 கோடி வரை வசூல் வந்திருக்கும் என கூறப்படுகிறது. மாவீரன் படக்குழு எதிர்பார்த்தது போல் முதல் நாள் நல்ல வசூல் கிடைத்துள்ளதால் செம்ம சந்தோஷத்தில் இருக்கிறது. வருகின்ற நாட்களில் சனி ஞாயிறு என்பதால் படத்தின் வசூல் இன்னும் அதிகரிக்கும் என கூறப்படுகிறது.