மாவீரன் முதல் நாள் முதல் காட்சியை பார்க்க வந்த விஜயின் மனைவி சங்கீதா.! முகத்தை மூடிக்கிட்டு வந்தாலும் ரசிகர் கண்டுபிடிச்சிடுவாங்க.

maaveeran fdfs
maaveeran fdfs

Maaveeran: இன்று ஜூலை 14ஆம் தேதி சிவகார்த்திகேயன் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள மாவீரன் திரைப்படம் திரைக்கு வந்துள்ளது. இந்த திரைப்படத்தை மடோன் அஸ்வின் இயக்கியுள்ளார். இதற்கு முன்பு இவர் யோகி பாபுவை வைத்து மண்டேலா என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.

தற்பொழுது இவர் சிவகார்த்திகேயனை வைத்து மாவீரன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக அதிதி சங்கர் நடித்துள்ளார். அது மட்டும் இல்லாமல் இயக்குனர் மிஷ்கின் வில்லனாக மிரட்டியுள்ளார். மேலும் நடிகை சரிதா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஏற்கனவே மடோ அஸ்வின் இயக்கிய மண்டேலா திரைப்படம் வித்தியாசமான கதைக்களத்தை கொண்டிருந்தது. அதனால் மாவீரன் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இரண்டு மடங்கு அதிகரித்தது. மேலும் மாவீரன் திரைப்படத்திற்கு விது அய்யனார் ஒலி பதிவு செய்துள்ளார். எடிட்டிங் பணிகளை ஃபிலோமின் ராஜ் செய்துள்ளார், இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் உருவாகியுள்ளது.

இன்று ஜூலை 14ஆம் தேதி முதல் நாள் முதல் காட்சியை ரசிகர்கள் கோலாகலமாக கொண்டாடி வருகிறார்கள். அது மட்டும் இல்லாமல் பல சினிமா பிரபலங்களும் முதல் நாள் முதல் காட்சியை பார்த்து ரசித்து வருகிறார்கள் அந்த வகையில் தளபதி விஜயின் மனைவி சங்கீதா விஜய் மாவீரன் திரைப்படத்தை பார்ப்பதற்காக திரையரங்கிற்கு வந்துள்ளார்.

இதை பார்த்த ரசிகர்கள் பலரும் புகைப்படம் எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட்டு வருகிறார்கள் அது மட்டும் இல்லாமல் மாவீரன் திரைப்படத்தை பார்த்த உதயநிதி ஸ்டாலின் சிவகார்த்திகேயன் அவர்களுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.

sangeetha vijay
sangeetha vijay