மாவீரன் படத்தின் “வசூலை” பார்த்து கெட்ட வார்த்தையில் திட்டிய ப்ளூ சட்டை மாறன்.? கடுப்பான ரசிகர்கள்

bluesattai
bluesattai

Maaveeran : பிரின்ஸ் படத்தின் தோல்விக்கு பிறகு சிவகார்த்திகேயன் இளம் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் மாவீரன் திரைப்படத்தில் நடித்தார். அவருடன் இணைந்து அதிதி ஷங்கர், மிஸ்கின், யோகி பாபு, சரிதா சுனில் மற்றும் பல முன்னணி நடிகர், நடிகைகள் நடித்து இருந்தனர்.

படம் ஜூலை 14 ஆம் தேதி உலக அளவில் படம் ரிலீஸ் ஆனது மாவீரன் திரைப்படம் முழுக்க முழுக்க ஆக்சன் காமெடி சென்டிமென்ட் கலந்த ஒரு படமாக இருந்ததால் குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வசூலிலும் எந்த குறையும் வைக்காமல் சக்க போடு போட்டது இதுவரை மட்டுமே மாவீரன் திரைப்படம் 75 கோடி வசூலித்துள்ளது உள்ளதாக படத்தை தயாரித்த சாந்தி டாக்கீஸின்  அதிகாரபூர்வ அறிவித்தது.

வருகின்ற நாட்களில் மாவீரன் படத்தின் வசூல் அதிகரிக்கும் இதனால் நிச்சயம் படம் 100 கோடி வசூல் அள்ளுவது உறுதியென ஒரு பக்கம் கூறுகின்றனர் இந்த நிலையில் சினிமா விமர்சகர் ப்ளூ சட்டை மாறன் சாந்தி டாக்கீஸின் அதிகாரப்பூர் அறிவிப்பை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து கெட்ட வார்த்தையில் திட்டி இருக்கிறார்.

அவரது இந்த ட்வீட் தற்போது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது இதற்குநெட்டிசன்கள் பலரும் பதிலடி கொடுத்து வருகின்றனர் ஒரு சினிமா விமர்சகராக இருந்துகிட்டு இப்படியெல்லம் பேசுலாமா எனக்கூறி வருகின்றனர். சிவா ரசிகர்களும் ப்ளு சட்டை மாறன் பயன்படுத்திய ஆதே வார்த்தையை குறிப்பிட்டு நீங்கள் ஒரு படம் எடுத்தீர்கள்..

ஆண்ட்டி இந்தியன் அப்பொழுது பாரதிராஜாவை வைத்து எல்லாம் அந்த படத்திற்கு விளம்பரம் செய்தீர்களே அப்பொழுது இதெல்லாம் செய்தீர்களே என அவரது ட்வீட்டிக்கு கமெண்ட் மூலம் பதிலடி கொடுத்து வருகின்றனர். இந்த தகவல் தகவல்கள் சோசியல் மீடியா பக்கத்தில் வேகம் எடுத்துள்ளது