வியக்க வைக்கும் வசூல்.! 8 நாள் முடிவில் மாவீரன் திரைப்படம் அள்ளிய கலெக்சன் எவ்வளவு தெரியுமா.?

maaveeran
maaveeran

maaveeran : தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து ஓடிக் கொண்டிருப்பவர் சிவகார்த்திகேயன் இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த பிரின்ஸ் திரைப்படம் மோசமான படமாக அமைந்தது அடுத்து நடிகர் சிவகார்த்திகேயன் இளம் இயக்குனர் மடோன் அஸ்வினுடன் இணைந்து மாவீரன் திரைப்படத்தில் கடுமையாக உழைத்தார்.

படம் வெளி வருவதற்கு முன்பாகவே மாவீரன் திரைப்படம் நிச்சயம் ஹிட் அடிக்கும் என சொன்னார் அது போலவே மாவீரன் திரைப்படம் ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்று தற்போது வெற்றி நடை கண்டு வருகிறது. ஒவ்வொரு நாளுமே மாவீரன் திரைப்படத்தின் வசூல் அதிகரித்துக் கொண்டே போனதால் மாவீரன் படகுழு செம்ம சந்தோஷத்தில் இருந்தது.

குறிப்பாக சிவகார்த்திகேயன் சந்தோஷத்தின் உச்சியில் இருக்கிறார். பிரஸ்மீட்டில் கூட அவர் பேசியது நான் திரை உலகில் 10 வருடங்களாக இருக்கிறேன் வெற்றி தோல்வியை என் வாழ்க்கையில் நான் கண்டு வருகிறேன் ஒவ்வொரு படமும் வெற்றி , தோல்வி மாறி மாறி  வருகிறது. எப்படி  இருந்தாலும் அதை நான் ரசிக்கிறேன் என கூறினார்.

இப்படி பேசிய நடிகர் சிவகார்த்திகேயன் மாவீரன் திரைப்படத்தின் வெற்றி எனக்கு ரொம்ப ஸ்பெஷல் எனவும் கூறியிருந்தார்.  மாவீரன் திரைப்படம் தொடர்ந்துநல்ல வசூலை அள்ளி வருவதால் நிச்சயம் 100 கோடி கிளிப்பில் இணையும் என பலரும் கூறி வருகின்றனர்.

இப்படி இருக்கின்ற நிலையில் மாவீரன் திரைப்படம் 8 நாள் முடிவில் எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து நமக்கு தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் இதுவரை மட்டுமே மாவீரன் திரைப்படம் 63 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் சொல்லுகின்றன.