16 நாள் முடிவில் மாவீரன் திரைப்படம் அள்ளிய வசூல் எவ்வளவு தெரியுமா.? வெளிவந்த நிலவரம்

Maaveeran
Maaveeran

Maaveeran : சிவகார்த்திகேயன் நடிக்கும் படங்களை பார்க்க மக்கள் அதிகம் ஆர்வம் காட்டுகின்றனர் காரணம்  அவரது படங்களில் பெரிதும் காமெடி இருக்கும் அதே சமயம் மக்களை கவர்ந்து இழுக்கும் வகையில் சில கருத்துக்களும் இருக்கும் இதனால் அவரது படத்திற்கு அதிகம் போட்டி பார்த்து வருக்கின்றனர்.

அந்த வகையில் டாக்டர், டான் போன்ற படங்கள் பெரிய வெற்றியை பதிவு செய்தன கடைசியாக நடித்த பிரின்ஸ் படம் மட்டும் சுமாராக ஓடியது இதிலிருந்து மீண்டு வர சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் உடன் கூட்டணி அமைத்து மாவீரன் படத்தில் நடித்தார் படம் ஜூலை 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.

படத்தில் சிவகார்த்திகேயனுடன் கைகோர்த்து யோகி பாபு, சரிதா, மிஸ்கின், சுனில், அதிதி சங்கர் மற்றும் பலர் நடித்திருந்தனர். மாவீரன் படம் முழுக்க முழுக்க ஆக்சன் காமெடி கலந்த ஒரு படமாக இருந்ததால் மக்கள் மத்தியில் சமூக வரவேற்பு பெற்று இன்றும் ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் 16 நாட்கள் முடிவில் மாவீரன் திரைப்படம் எவ்வளவு வசூல் அள்ளி உள்ளது என்பது குறித்து தகவல் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் மாவீரன் திரைப்படம் இதுவரை மட்டுமே சுமார் 79 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது தொடர்ந்து மாவீரன் படம் ஓடும் பச்சத்தில் நிச்சயம் 100 கோடி வசூல் அள்ளுவது உறுதி என கூறி வருகின்றனர்.

ஆனால் திரை வட்டாரங்கள் பக்கத்தில் மாவீரன் படம் 100 கோடி வசூல் அள்ளுவது கஷ்டம் அதிகபட்சமாக 90 கோடி வரை போகும் என  ஒரு தகவல் உலாவி கொண்டு இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்..