Maaveeran : திரையுலகில் படிப்படியாக முன்னேறியவர்களுக்கு தெரியும் ஒரு படம் எவ்வளவு முக்கியம் என்பது அதை நன்கு புரிந்து வைத்திருப்பவர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன் தான் நடிக்கும் ஒவ்வொரு படத்தின் கதையையும் நன்கு அறிந்து அதற்கு ஏற்றார் போல 100% உழைப்பை கொடுத்து..
அவர் நடிப்பதால் அவருடைய படங்கள் ஒவ்வொன்றும் மாபெரும் வெற்றி படங்களாக மாறுகின்றன. அப்படி டாக்டர், டான் போன்ற படங்கள் 100 கோடி வசூல் செய்தன. ஹாட்ரிக் வெற்றி கொடுக்க பிரின்ஸ் படத்தில் நடித்தார் அந்த படம் மோசமான படமாக அமைந்ததை தொடர்ந்து சிவகார்த்திகேயன் மடோன் அஸ்வின் உடன் கூட்டணி அமைத்து மாவீரன் படத்தில் நடித்தார்.
படம் ரிலீசுக்கு முன்பே படம் வெற்றி பெறும் என சிவகார்த்திகேயன் சொன்னார் அதன் போலவே படம் ஜூலை 14ஆம் தேதி தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் ரிலீஸ் ஆனது படம் முழுக்க முழுக்க ஆக்சன், காமெடி, சென்டிமென்ட் என அனைத்தும் கலந்த ஒரு அற்புதமான படமாக இருந்ததால்..
ரசிகர்களின் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அதனால் மாவீரன் திரைப்படத்தின் வசூலும் நாளுக்கு நாள் அதிகரித்தது. படகுழு செம சந்தோஷமடைந்தது இப்பொழுது வரை மாவீரன் படத்தின் வசூல் நிற்கவேயில்லை படம் வெளியாகி 10 நாட்கள் ஆன நிலையில் சிவகார்த்திகேயனின் மாவீரன் திரைப்படம்.
உலக அளவில் சுமார் 73 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமிழகத்தில் மட்டும் 46 கோடி, சென்னையில் மட்டும் 4.9 கோடி வசூலித்து உள்ளது. இப்படியே நல்ல வசூலை அள்ளினால் ஒரு வாரத்திற்குள்ளேயே 100 கோடியை மாவீரன் தொடும் என சொல்லப்படுகிறது.