சூர்யாவின் அடுத்த திரைப்படத்தின் இயக்குனர் இவர் தான் இதோ அதிகாரபூர்வ அறிவிப்பு.!இவர் மரண ஹிட் இயக்குனர் ஆச்சே.!

surya
surya

தமிழ் சினிமாவில் சமீபத்தில் பிரபல இயக்குனராக உள்ளவர் இயக்குனர் மாரி செல்வராஜ்.  இவர் இயக்கிய முதல் திரைப்படம் பரியேறும் பெருமாள். இதுதான் இவரின் முதல் படமாக இருந்தாலும்  மாரி செல்வராஜ் தனது சிறந்த திறமையின் மூலம் அருமையாக இயக்கியிருந்தார்.

பரியேறும் பெருமாள் திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. அதுமட்டுமல்லாமல் கீழ ஜாதியில் உள்ள மக்கள் எந்தெந்த இடங்களில் அவமானங்களை சந்திக்க வேண்டிருக்கும் என்ற கதையை மையமாக வைத்து இயக்கப்பட்டதால் இத்திரைப்படத்திற்கு ரசிகர்கள் தங்களது பெரும் ஆதரவை அளித்திருந்தார்கள்.

அதோடு இத்திரைப்படம் மக்கள் மத்தியில் பெரும்தாக்கத்தையும் ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜ் தனுஷ் நடிப்பில் கர்ணன் திரைப்படத்தை இயக்கியுள்ளார்.இத்திரைப்படம் இரு தினங்களுக்கு முன்பு வெளியாகி மாபெரும் வெற்றி நடை போட்டு வரும் திரைப்படம் கர்ணன்.

இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தனுஷை தொடர்ந்து தற்போது மாரிசெல்வராஜ் சூர்யாவை டார்கெட் வைத்துள்ளார்.

சமீபத்தில் சூர்யாவின் 40 இப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரித்து வருகிறார். எனவே தற்பொழுது இத்திரைப்படத்தை மாரி செல்வராஜ் இயக்கவுள்ளார் என்று கூறியுள்ளார்கள். இதனை அறிந்த சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் இருந்து வருகிறார்கள்.