முடிஞ்சா என்ன நிறுத்துங்க தனுஷ் மிரட்டலில் வெளியானது மாறன் திரைப்படத்தின் ட்ரைலர்.!

maran
maran

தனுஷ், மாளவிகா மோகனன், ஸ்மிருதி வெங்கட், சமுத்திரகனி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் மாறன் இந்த திரைப்படத்தை கார்த்திக் நரேன் இயக்கியுள்ளார். கார்த்திக் நரேன் இதற்கு முன்பு நரகாசுரன், மாபிய சப்டர் 1, 16 எக்ஸ்ட்ரீம் ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார்.

மாறன் திரைப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தான் பிரமாண்டமாக தயாரித்துள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் இந்த திரைப்படம் Ott இணையதளத்தில் வெளியாக இருக்கிறது.

மேலும் இந்த திரைப்படத்திற்கு ஜீவி பிரகாஷ் இசையமைத்துள்ளார் அதனால் இந்த திரைப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் வைரலாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தநிலையில் மாறன் திரைப்படத்திலிருந்து டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

அதிரடி ஆக்ஷன் கலந்த இந்த திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.