மாநாடு சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து லீக்கான சிம்புவின் புகைப்படம்.!

maanadu
maanadu

சினிமாவிற்கு குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வந்து கொண்டிருப்பவர் நடிகர் சிம்பு. இவர் வாரிசு நடிகராக தமிழ் சினிமாவிற்கு அறிமுகமாகி இருந்தாலும் இவர் செய்த சில தவறுகளினால் இவரின் ஒட்டுமொத்த சினிமாவும் இவரை விட்டு போனது.

இவர் ஹீரோவாக அறிமுகமான காலகட்டத்தில் பல தோல்வி படங்களை  சில வெற்றிப் படங்களையும் தந்து வந்தார். அந்த வகையில் ஒரு காலகட்டத்தில் இவரின் நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் தியேட்டரில் ரிலீஸ்சாவது குதிரைக் கொம்பாக இருந்தது.

பல பிரச்சனைகளை சந்தித்து அதன் பிறகு தான் இவரின் திரைப்படங்கள் வெளிவரத் தொடங்கியது. ஒரு சில திரைப்படங்கள் இன்று வரையிலும் சேட்டிலைட் உரிமை கூட பெறாமல் இருக்கிறது என்றால் பார்த்துக்கோங்க.

இந்நிலையில் இவரின் மீது பல சர்ச்சைகள் ஏற்பட்டதாலும் இவரின் சிறு சிறு தவறுகளினால் ஒரு காலத்தில் இவருக்கு திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை எனவே சினிமாவில் பெரிதாக நடிக்காமல் இருந்து வந்தார் தற்பொழுது தான் தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார்.

அந்த வகையில் சமீபத்தில் இவர் நடிப்பில் ஈஸ்வரன் திரைப்படம் வெளிவந்து விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பை பெற்றிருந்தாலும் வசூல் ரீதியாக சொல்லுமளவிற்கு வெற்றிபெறவில்லை சுமாரான படமாக அமைந்தது. இதனை தொடர்ந்து இவர் மாநாடு திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இத்திரைப்படத்தின் சூட்டிங் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.ஆனால் தற்போது கொரோனாவின் மூன்றாவது அலை மிகவும் வேகமாக பரவி வருவதால் தற்போது தான் படப்பிடிப்புகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  இத்திரைப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகிறார்கள்.

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றது. தற்பொழுது திரைப்படத்திற்கான ப்ரோமோஷன் வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள் படக்குழுவினர்கள். மாநாடு திரைப்படத்தில் இவரின் கெட்டப்பு எப்படி இருக்கிறது  என்பது குறித்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் இவர் கலந்து கொள்ளும் பொழுது தெரியவந்தது.

simpu 2
simpu 2

இந்நிலையில் தற்பொழுது இயக்குனர் வெங்கட் பிரபு மற்றும் சிம்பு ஆகியோர் இருக்கும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

simpu 3
simpu 3