2019ஆம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டான திரைப்படத்தின் 2வது பாகத்தை தற்பொழுது மாநாடு திரைப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி அவர்கள் தயாரிக்க இருக்கிறார் என அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி நல்ல கதை உள்ள திரைப்படத்தை தயாரித்து அதன்மூலம் வெற்றி கண்டு வருகிறார் இந்த நிலையில் வெற்றி நடிப்பில் விஜே கோபிநாத் என்பவரின் இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு ஜீவி என்ற திரைப்படம் உருவானது இந்த திரைப்படம் அப்பொழுது ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்த திரைப்படத்தின் 2வது பாகத்தை மாநாடு திரைப்படத்தை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்க இருப்பதாக அதிகாரபூர்வ தகவல்கள் வெளியிட்டுள்ளார்கள். மேலும் இந்த திரைப்படத்தை முதல் பாகத்தை இயக்கிய விஜே கோபிநாத் அவர்கள் தான் இந்த இரண்டாவது பாகத்தையும் இயக்க இருக்கிறார்.
அதேபோல் முதல் பாகத்தில் நடித்த வெற்றி அவர்கள் இந்த இரண்டாவது பாகத்திலும் நாயகனாக நடிக்க இருக்கிறார். மேலும் கே எஸ் சுந்தரமூர்த்தி இசையில் பிரவீன் குமார் ஒளிப்பதிவு செய்த திரைப்படம் விரைவில் உருவாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் முதல் பாகத்தில் பணியாற்றிய அனைத்து பிரபலங்களும் இந்த இரண்டாவது பாகத்தில் இணைந்துள்ளது அதிகாரபூர்வமாக தகவல் வெளியானது.
இதோ அதன் புகைப்படம்.
Triangle Theory Starts Again 🔺 #jiivi2#VHouseProductions #SureshKamatchi @act_vetri@pravethedop@Cinemainmygenes pic.twitter.com/VDEnwGjFhr
— V.J Gopinath (@Vjgopinath1) March 4, 2022