மங்காத்தா லெவலுக்கு மாநாடு படம் இருக்கும் மாஸ் காட்டும் தயாரிப்பாளர்.!

t.r-simbu
t.r-simbu

வெள்ளித்திரையில் சிம்புவை வைத்து கலாய்த்த சினிமா பிரபலங்கள் பலரும் தற்போது சிம்புவின் நடிப்பு திறமையை பார்த்து வாயடைத்துப் போய்விட்டார்கள்.

சிம்பு உடல் எடையை குறைத்ததால் அடுத்ததாக பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கிறது.

சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தை  சிம்பு ஒரே மாதத்தில் படத்தை முழுமையாக முடித்து விட்டார் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்திற்கான பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.  ஆனால் ரசிகர்கள் பலரும் குழம்பிப் போனார்கள்.

ஏனென்றால் இந்த படத்திலிருந்து 2 ஃபர்ஸ்ட் லுக் வெளியானது அந்த பர்ஸ்ட் லுக் புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் சிம்பு இந்த படத்தில் இரண்டு வேடத்தில் நடிக்கிறார் என்று கேள்வி எழுப்பி வந்தார்கள்.

ரசிகர்களுக்கு குழப்பம் இல்லாமல் இந்த படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி விளக்கம் அளித்துள்ளார் அதில் அவர் சிம்பு மாநாடு திரைப் படத்தில் இரட்டை வேடத்தில் நடிக்கவில்லை என்றும் இந்த படம் மங்காத்தா அளவிற்கு வெங்கட் பிரபுக்கு அமையும். என்று சூப்பரான தகவல்களை ரசிகர்களுக்கு கூறினார்.

இந்த தகவல் தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகிறது