தமிழ் சினிமாவில் வெங்கட் பிரபு தவிர்க்க முடியாத இயக்குனர்களில் ஒருவர், அது மட்டும் இல்லாமல் மிகவும் ஜாலியான இயக்குனர் என்று கூறலாம் இவர் இயக்கும் திரைப்படங்கள் என்டர்டைன்மென்ட் ஆக ஜாலியாக இருக்கும். அந்த வகையில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வித்தியாசமான கதைகளத்தில் உருவாகிய திரைப்படம் தான் மாநாடு இந்த திரைப்படத்தில் சிம்பு ஹீரோவாக நடித்திருந்தார்.
நீண்ட நாட்கள் ஹிட் கொடுக்க வேண்டும் என்று காத்துக் கொண்டிருந்த சிம்புவுக்கு மாநாடு திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பு பெற்று கொடுத்தது. அதே போல் இந்த திரைப்படத்தில் நடிப்பு அரக்கன் என்று கொண்டாடப்படும் வில்லனாக நடித்து அனைவரையும் அசர வைத்தார். இந்த திரைப்படம் எதிர்பார்த்ததைவிட மிகப்பெரிய வெற்றியை நிலை நாட்டியது.
மேலும் இந்த திரைப்படத்தை தொடர்ந்து எஸ் ஜே சூர்யா அவர்கள் பல திரைப்படங்களில் வில்லனாக நடித்து பட்டையை கிளப்பி வருகிறார் தமிழ் சினிமாவில் வில்லன் என்றால் விஜய் சேதுபதி என்ற அடையாளத்தை அசைத்துப் பார்த்தவர் எஸ் ஜே சூர்யா தற்பொழுது எஸ்.ஜே சூர்யா பல திரைப்படங்களில் வில்லனாக நடித்த வருகிறார்.
ஆனால் ஆரம்பத்தில் வில்லனாக மாநாடு திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா நடிப்பதாக கிடையாது அதற்கு ஒரு பெரிய லிஸ்ட் இருந்துள்ளது முதலில் இந்த திரைப்படத்தின் வில்லனாக நடிகர் பசுபதி தான் நடிக்க முடிவு செய்துள்ளார்கள் ஆனால் கதையில் சிறிது மாற்றம் செய்ததால் அர்ஜுனை நடிக்க வைக்க திட்டம் தீட்டினார்கள் ஆனால் அவரின் கால்ஷீட் கேட்டுள்ளார்கள் அதற்கு முஸ்லிம் பிரச்சினைகள் இருப்பதால் நான் இதனை பண்ண முடியாது எனக்கூறி விட்டார்.
அவரைத் தொடர்ந்து அரவிந்த்சாமி ரவி தேஜா கிச்சா சுதீப் என பல நடிகர்களிடம் இந்த கதாபாத்திரத்தில் நடிக்க கேட்டுள்ளார்கள் ஆனால் அப்பொழுது யாரிடமும் கால்ஷீட் கிடையாது இதனால் sj சூர்யாவிடம் இந்த ரோல் வந்தது அதன் பிறகு தான் அவர் நடித்துக் கொடுத்தார் இந்த தகவல் ரசிகர் மத்தியில் பரபரப்பாக வைரலாகி வருகிறது.