மாநாடு படத்தில் இணைந்த முக்கிய பிரபலம்.! ரசிகர்களிடம் எகிறும் எதிர்பார்ப்பு.!

simbu

சிம்பு தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்திற்கு முன்னரே சுசீந்திரன் இயக்கத்தில் ஈஸ்வரன் என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார்.

ஈஸ்வரன் திரைப்படத்தில் நடித்து வரும் போதே சிம்புவுக்கு பல பிரச்சனைகள் அடுத்து அடுத்அத்தாக வந்துகொண்டே இருந்தது அதையும் தாண்டி தற்போது அந்த படத்தை சுசீந்திரனுக்கு முடித்துக் கொடுத்துவிட்டு இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் மாநாடு என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார் மேலும் இவர் பல படங்கள் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கிறது.

மாநாடு திரைப்படத்தை வெங்கட்பிரபு இயக்கி சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார் மேலும் இந்த திரைப்படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கல்யாணி பிரியதர்ஷன் நடித்து வருகிறார் இதனைத் தொடர்ந்து இந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா, பாரதிராஜா, மனோஜ் பாரதிராஜா, எஸ் ஏ சந்திரசேகர் போன்ற பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

அந்த வகையில் தற்போது அந்த திரைப்படத்தில் ஒரு நடிகர் இணைந்துள்ளார் அந்த நடிகர் யார் என்று தெரியுமா அந்த நடிகர் தான் ஆகாஷ்.

வெங்கட் பிரபு மற்றும் சிம்பு, ஆகாஷ் மூன்று பேரும் இணைந்து இருக்கும்பொழுது வெங்கட்பிரபு எடுத்த புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து இருக்கிறார் அவர் பகிர்ந்த புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.