சினிமாவைப் பொருத்தவரை நடிகைகள் பிரபலம் அடைவது மிகவும் அரிதான ஒன்று அதேபோல் நடிகைகளை விட சிறு சிறு கதாபாத்திரத்தில் நடித்த நடிகைகள் மத்தியில் நீங்கா இடத்தைப் பிடித்து விடுகிறார்கள். அதற்கு காரணம் அவர்கள் நடிக்கும் கதாபாத்திரமும் அவர்களின் சிறந்த நடிப்பும் தான்.
அந்த வகையில் 2014-ம் ஆண்டு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகிய திரை படம் மான்கராத்தே இந்த திரைப்படத்தில் ஹன்சிகா மோட்வானி, சதீஷ், யோகி பாபு பரோட்டா சூரி ஆகியோர் நடித்திருந்தார்கள். இந்த திரைப்படத்தில் சதீஷ் கேங்கில் வரும் இந்த நடிகையை யாரும் மறந்திருக்க மாட்டார்கள் ஏனென்றால் மான் கராத்தே திரைப்படத்தில் வைஷ்ணவி என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர் பெயர் மாயா.
இவருடைய உண்மையான பெயர் பிரீத்தி சங்கர் இவர் சென்னையை சேர்ந்த பெண்மணி. தன்னுடைய கல்லூரி படிக்கும் காலங்களில் மேடை நாடகம் நடனம் என அசத்தி வந்தார். இவர் எஸ் ஆர் எம் கல்லூரியில் பல் மருத்துவ படிப்பை படித்தவர் நடிப்பின் மீது அதிக ஆர்வம் இருந்ததால் சினிமாவை தேர்ந்தெடுத்தார். தன்னுடைய ஆரம்பகால கட்டத்தில் சின்ன சின்ன விளம்பர திரைப்படங்களில் நடித்துள்ளார் அதன் பின்பு மான் கராத்தே படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
மான் கராத்தே திரைப்படத்தில் சிவகார்த்திகேயனிடம் இப்போதெல்லாம் எந்த பார்லியும் பீர் சில்லுனு கிடைக்கவில்லை என சொல்லும் பொழுது நடிகர் சிவகார்த்திகேயன் அடியே ரத்தி அக்னிஹோத்ரி நல்லா டின் பீர் மாதிரி இருக்க சொல்லவே நெனச்சேன் டி என சொல்லும் வசனம் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்தது.
தற்பொழுது இவர் அன்பா அழகா என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் இந்த திரைப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. மான் கராத்தே திரைப்படத்திற்கு பிறகு டார்லிங் 2 உன்னோடு கா, மெட்ரோ ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார்.
தற்போது இவரின் மாடன் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் பரவிவருகிறது இதைப்பார்த்த ரசிகர்கள் நல்ல என் பேரு மாதிரி இருக்கீங்க என வசனம் பேசி கமெண்ட் செய்து வருகிறார்கள்.