Maamannan : இயக்குனர் மாரி செல்வராஜ் தனது படங்களின் மூலம் சமூகத்திற்கு தேவையான கருத்துக்களை தொடர்ந்து சொல்லி வருகிறார். முதலில் பரியேறும் பெருமாள் படத்தை எடுத்து அறிமுகமானார் அதனைத் தொடர்ந்து தனுஷ் உடன் கைகோர்த்து கர்ணன் என்னும் படத்தை எடுத்து வெற்றி கண்டார்.
அதன் பிறகு பட்டிதட்டி எங்கும் மாரி செல்வராஜ் பிரபலமடைந்தார். சிறு இடைவேளைக்குப் பிறகு மாமன்னன் படத்தை எடுத்தார் இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், ரவீனா ரவி, வடிவேலு, பகத் பாஸில் மற்றும் பல நடித்திருந்தனர் படம் கடந்த ஜூன் 29ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது மாமன்னன் முழுக்க முழுக்க ஆக்சன்..
காமெடி, எமோஷனல் என அனைத்தும் கலந்த ஒரு படமாக இருந்ததால் ரசிகர்களையும் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது அதிக நாட்கள் ஓடியதோடு மட்டுமல்லாமல் வசூலிலும் பட்டையை கிளப்பியது.
அதனை தொடர்ந்து OTT தளத்திலும் வெளியாகி நல்ல வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் மாமன்னன் படத்தை பார்த்துவிட்டு நடிகர் சூர்யாவின் அப்பா சிவகுமார் பேசியது என்னவென்றால்.. தம்பி மாரி செல்வராஜுக்கு.! நான் மாமன்னன் படத்தை பார்த்தேன்.
இது படம் இல்ல உங்கள் வாழ்க்கையில் நடந்த வலி பாதிக்கப்பட்டவன் தான் இவ்வளவு அழகாக சொல்ல முடியும். திரைப்படம் மூலம் நீங்கள் சொல்ல வேண்டிய செய்தி அதிகம் இருக்கிறது உங்களையும் வடிவேலுவையும் சந்தித்து ஆரதழுவ எண்ணுகிறேன். விரைவில் சந்திப்போம் என்று கூறியுள்ளார் இவரின் இந்த பதிவுக்கு மாரி செல்வராஜ் நன்றி சார் என பதவி பெற்றுள்ளார். இதோ நீங்களே பாருங்கள்.