Maamannan : சினிமாவில் இருக்கும் பெரும்பாலான இயக்குனர்கள் கமர்சியல் படங்களை கொடுத்து தன்னை தக்க வைத்துக் கொள்கின்றனர் ஆனால் இதிலிருந்து முற்றிலும் மாறுபட்டவர் இளம் இயக்குனர் மாரி செல்வராஜ். இவர் இதுவரை எடுத்த படங்கள் அனைத்துமே சமூகத்திற்கு தேவையான பல கருத்துக்கள் நிறைந்த படங்களாக இருந்து வந்துள்ளன.
அந்த வகையில் முதலில் பரியேறும் பெருமாள் என்னும் படத்தை எடுத்து வெற்றி கண்டார் அதனை தொடர்ந்து தனுஷ் உடன் கூட்டணி அமைத்து கர்ணன் என்னும் பிளாக் பஸ்டர் படத்தை எடுத்தார் அதை தொடர்ந்து உதயநிதியின் கடைசி படமான மாமன்னன் படத்தையும் இவர் எடுத்தார் படம் ஜூன் 29ஆம் தேதி கோலாகலமாக திரையரங்குகளில் வெளியானது.
படம் முழுக்க முழுக்க சமூகத்திற்கு தேவையான கருத்துக்கள் மற்றும் ஆக்சன், காமெடி என அனைத்தும் கலந்து இருந்ததால் ரசிகர்களின் தாண்டி குடும்ப ஆடியன்ஸ் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று பட்டிதொட்டி எங்கும் சக்க போடு போட்டது.
படத்தில் வடிவேலு, பகத் பாசில், கீர்த்தி சுரேஷ், உதயநிதி மற்றும் ரவீனா ரவி போன்றவர்களின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது அதன் காரணமாக மாமன்னன் படத்தின் வசூலும் அடித்து நொறுக்கியது. மாமன்னன் படம் வெளியாகி இத்துடன் 25 நாட்கள் ஆகிறது.
இதுவரை எவ்வளவு வசூல் செய்துள்ளது என்பது குறித்து தகவலும் கிடைத்திருக்கிறது அதன்படி பார்க்கையில் மாமன்னன் திரைப்படம் 25 நாட்கள் முடிவில் 72 கோடி வசூல் செய்துள்ளது பெரிய ஹிட் படமாக மாறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை நடிகர் உதயநிதி ஸ்டாலின் ரசிகர்கள் கொண்டாடி வருகிறனர்.