M. N. Nambiar : சினிமா துறையில் கதாநாயகனாக சிறந்து விளங்கியவர்களில் எம் ஜி ஆர், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன் என பலரை கூறிக் கொண்டே செல்லலாம் ஆனால் வில்லனாக நடித்து தனக்கென ஒரு மிகப்பெரிய சாம்ராஜ்யத்தை உருவாக்கியவர் ஆனால் வில்லனாக பல திரைப்படங்களில் நடித்துள்ளார் நம்பியார் இவர் வில்லனாக நடித்து தனக்கென மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி வைத்திருந்தவர்.
வில்லாதி வில்லனாக நடித்து வந்த நம்பியார் முதலில் காமெடியனாக தான் அறியப்பட்டார் 1935இல் பக்த ராமதாஸ் என்ற திரைப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் தான் நடித்திருந்தார் வில்லன் என்றாலே நம்பியார் என பெயர் பெற்ற இவர் கதாநாயகனாக கல்யாணி, வேலைக்காரி ஆகிய திரைப்படங்களில் நடித்தார் ஆனால் ரசிகர்கள் அதனை ஏற்றுக் கொள்ள மறுத்தார்கள் வில்லன் நம்பியாரை தான் ரசிகர்கள் கொண்டாடினார்கள் என்னதான் திரையில் வில்லனாக நடித்து வந்தாலும் நிஜத்தில் குழந்தை மனம் கொண்டவர்.
இரக்க குணம் கொண்ட நல்ல மனிதர் அதேபோல் நம்பியார் ஒரு வருடத்தில் இரண்டு மலைக்கு நிச்சயமாக சென்று விடுவார் அதில் ஒன்று தான் பிறந்து வளர்ந்த நீலகிரி மலை மற்றொன்று ஐயப்பனின் சபரிமலை அதேபோல் தன்னுடன் பலரை சபரிமலைக்கு அழைத்துச் சென்றுள்ளார் இந்த நிலையில் நட்பு வட்டாரம் நம்பியாருக்கு அதிகம் அதனால் இவரை சாமி குருசாமி என்று தான் அழைப்பார்கள்.
திரைத்துறையில் நம்பியாரால் நடித்து ரசிகர்களால் அதிகம் பேசப்பட்ட திரைப்படம் என்றால் 1950 ஆம் ஆண்டு வெளியாகிய திகம்பர சாமியார் என்ற திரைப்படம் தான் இந்த திரைப்படம் வரலாற்று கதையோ அல்லது அரசு ராஜிய கதையோ கிடையாது இது முழுக்க முழுக்க கிரைம் திரில்லர் திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்தது இந்த திரைப்படத்தில் கதாநாயகனாக நம்பியார் நடித்திருந்தார் மேலும் இந்த திரைப்படத்தில் நம்பியார் 11 கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
வெற்றிலை வியாபாரி, செவிட்டு மந்திரவாதி, நாதஸ்வர வித்வான், போஸ்ட்மேன், இஸ்லாமியர் உள்ளிட்ட 11 வேடங்களில் இந்த திரைப்படத்தில் நடித்த அசத்தி இருந்தார் அந்த காலத்திலேயே ஒரே ஒரு படத்தில் 11 கெட்டப் கலில் நம்பியார் தோன்றி அசத்தியிருந்தார். அதன் பிறகு தான் கமல் தசாவதாரத்தில் பல கெட்டப் கலில் நடித்து அசத்தி இருந்தார் அதனால் கமலுக்கு முன்பே பல கெட்டப் போட்டு நடித்தவர் என்ற பெருமையை நம்பியார் அடைந்து விட்டார்.