எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி திரைப்படத்தில் தனுஷ்.! வைரலாகும் புகைப்படம்.

m-kumaran
m-kumaran

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு இயக்குனர் மோகன் ராஜா நல்ல கதை உள்ள திரைப்படத்தை கொடுத்து வருகிறார், இவர் இயக்கத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் ரசிகர்களிடையே மிகவும் பிரபலமடைந்துள்ளது அதிலும் தனி ஒருவன் திரைப்படம் சினிமா ரசிகர்களிடையே தனி இடத்தை பிடித்துவிட்டது.

அந்த வகையில் இயக்குனர் மோகன் ராஜா 2004 ஆம் ஆண்டு இயக்கிய திரைப்படம்தான் எம் குமரன் சன் ஆப் மகாலட்சுமி இந்த திரைப்படத்தில் ஜெயம் ரவி ஹீரோவாக நடித்திருப்பார் நடிகை அசின் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் பிரகாஷ் ராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

மேலும் நதியா, விவேக், ஜனகராஜன், லிவிங்ஸ்டன், சுப்பாராஜு என பல நட்சத்திரங்கள் நடித்து இருந்தார்கள், இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளராக ஸ்ரீகாந்த் தேவா இசை அமைத்திருப்பார், இந்த திரைப்படத்தின் மூலம் சிறந்த இசையமைப்பாளருக்கான தமிழ்நாடு மாநிலத் திரைப்பட விருதை தட்டிச் சென்றார்.

இந்த திரைப்படம் “அம்மா நானா ஓ தமிழ் அம்மாயி” என்ற தெலுங்கு திரைப்படத்தை தழுவி எடுக்கப்பட்டது, படமும் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களை பெற்று வெற்றி பெற்றது, மேலும் இந்த திரைப்படம் தான் ஜெயம் ரவிக்கு தமிழ் சினிமாவில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்திக் கொடுத்தது அதன்பிறகுதான் ஜெயம் ரவி நடிகராக வலம்வந்தார்.

இந்த நிலையில் படத்தின் பூஜை நிகழ்ச்சியில் படக்குழுவினருடன் நடிகர் தனுஷ் ஸ்ரீகாந்த், சிபி சத்யராஜ் ஆகியோர் கலந்து கொண்டுள்ளார்கள் அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் காட்டுத்தீ போல் பரவி வருகிறது.

இதோ அந்த புகைப்படங்கள்.