விடாமுயற்சி – லிருந்து தூக்கினாலும் லிஸ்ட்ல நீங்களும் இருக்கீங்க.. விக்னேஷ் சிவன் குறித்து லைகா ட்வீட்

Vignesh shivan
Vignesh shivan

Vignesh shivan brithday : தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஒரு இயக்குனர் விக்னேஷ் சிவன்.  2007 ஆம் ஆண்டு உருவான சிவி படத்தில் நடித்து அறிமுகமானார் 2012 ஆம் ஆண்டு போடா போடி என்னும் படத்தை இயக்கியதோடு மட்டுமல்லாமல் நடித்தும் அசதினார் இந்த படம் வெளிவந்து வெற்றி பெற்றது அதனைத் தொடர்ந்து  தனுஷின் வேலையில்லா பட்டதாரி படத்தில் தலை காட்டினார்.

2015 ஆம் ஆண்டு நயன்தாரா மற்றும் விஜய் சேதுபதியை வைத்து இவர் அடுத்த நானும் ரவுடிதான் திரைப்படம் முழுக்க முழுக்க காமெடி திரைப்படமாக இருந்தது படம் வெளிவந்து பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது அதன் பிறகு டாப் ஹீரோக்களுக்கு கதை சொல்ல ஆரம்பித்தார் சூர்யாவை வைத்து தானா சேர்ந்த கூட்டம், மீண்டும் விஜய் சேதுபதி வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் போன்ற படங்களை இயக்கினார்.

இப்படி ஓடிக் கொண்டிருந்த இவர் நானும் ரவுடிதான் படத்தின் போது நயன்தாரா மீது காதல் வயப்பட்டார் அதன் பிறகு இருவரும் ஆறு வருடங்கள் காதலித்து வந்த நிலையில் கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி முறைப்படி திருமணம் செய்து கொண்டனர் இவர்கள் இருவருக்கும் இரு ஆண் குழந்தைகள் இருகின்றனர் சினிமாவில் இரண்டு பேரும் பிசியாக ஓடினாலும்..

கிடைக்கின்ற நேரங்களில் தனது குழந்தைகளுடன் நேரத்தை செலவிட்டு வாழ்க்கையை அனுபவித்து வாழ்ந்து வருகின்றனர் இந்த நிலையில் விக்னேஷ் சிவன் தனது 39 ஆவது பிறந்த நாளை இன்று கொண்டாடுகிறார்  பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர் அப்படித்தான் லைகா நிறுவனம் விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.. பன்முக திறமைசாலியான விக்னேஷ் சிவனை வாழ்த்துகிறோம்..

ஒரு ராக்கிங் பிறந்தநாள் இன்னும் அற்புதமான திரைப்படங்கள் அற்புதமான பாடல்களுடன் எங்களை மகிழ்விக்கவும் என லைகா பிறந்தநாள் வாழ்த்து சொல்லி உள்ளது. இதை பார்த்த ரசிகர்கள் லைகா விக்னேஷ் சிவனை கைவிட வில்லை  இன்னொரு வாய்ப்பு கொக்க இருக்கிறது எனக் கூறி கமெண்ட் அடித்து வருகின்றனர்.

Vignesh shivan
Vignesh shivan