அஜித் துணிவு திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் ஏகே 62 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார் இதன் அதிகாரபூர்வ அப்டேட் வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தார்கள் இந்த நிலையில் பங்கமாய் ஏமாற்றியுள்ளது லைக்கா நிறுவனம்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும் வசூல் மன்னனாகவும் வலம் வருபவர் அஜித் இவர் எச் வினோத் இயக்கத்தில் துணிவு திரைப்படத்தில் நடித்திருந்தார் இந்த திரைப்படம் கடந்த பொங்கல் தினத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றுள்ளது அது மட்டும் இல்லாமல் இந்த திரைப்படத்துடன் வாரிசு திரைப்படமும் வெளியானாலும் துணிவு திரைப்படத்திற்கு எந்த ஒரு பாதிப்பும் இல்லாமல் நல்ல வரவேற்பை பெற்றது.
அப்படி இருக்கும் நிலையில் அஜித் அடுத்ததாக ஏ கே 62 திரைப்படத்தில் நடிக்க இருந்தார் இந்த திரைப்படத்தை விக்னேஷ் சிவன் அவர்கள் தான் இயக்க இருந்தது ஆனால் சில கருத்து வேறுபாடு காரணமாகவும் அவர் சரியாக கதையை முடிக்காததாலும் அஜித் விக்னேஷ் சிவனை ஏகே 62 இலிருந்து நீக்கி உள்ளார் மகிழ் திருமேனி ak 62 திரைப்படத்தை இயக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
ஏ கே 62 இல் மகிழ்திருமேனி இணைந்திருந்தாலும் இதுவரை இன்னும் லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடாமல் மௌனம் காத்து வருகிறது. லைக்கா நிறுவனம் தான் ஏ கே 62 திரைப்படத்தை தயாரிக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியானது அப்படி இருக்கும் நிலையில் ஏ கே 62 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்பொழுது ரிலீசாகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த நிலையில் நேற்று மாலையில் லைக்கா நிறுவனம் திடீரென தாங்கள் தயாரிக்க உள்ள 24 வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் ரிலீஸ் நாளை வெளியிடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.
ஆனால் எந்த ஒரு அறிவிப்பையும் குறிப்பிடாமல் லைக்கா நிறுவனம் மொட்டையாக இது போல் அறிவித்தது அதனால் ஏகே 62 திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தான் நாளை வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். அதேபோல் இன்று காலை லைகா நிறுவனம் தங்களின் 24வது திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டது அதை பார்த்த அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம்தான் கிடைத்தது.
ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஏ கே 62 திரைப்படத்தின் அப்டேட் வெளியிடாமல் தாங்கள் தயாரிக்க இருக்கும் சிறு பட்ஜெட் படமான திருவின் குரல் என்ற திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை தற்பொழுது வெளியிட்டுள்ளது இந்த போஸ்டரை பார்த்த அஜித் ரசிகர்கள் மிகப்பெரிய அப்செட்டில் இருக்கிறார்கள் அதுமட்டுமில்லாமல் லைக்கா நிறுவனத்தை பார்த்து அஜித் ரசிகர்கள் ஏகே 62 அப்டேட்டை வெளியிடுமாறு குரல் எழுப்பி வருகிறார்கள்.