தமிழ் சினிமாவில் இன்று உச்ச நட்சத்திரமாக ஜொலிப்பவர் நடிகர் அஜித்குமார் இவர் சமீபகாலமாக நடிக்கும் திரைப்படங்கள் ஒவ்வொன்றும் சமூக அக்கறை கலந்த படங்களாக இருப்பதால் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெறுகிறது. கடைசியாக இவர் நடித்த துணிவு திரைப்படம்..
கூட சமூக அக்கரை கலந்த ஒரு ஆக்சன் படமாக இருந்தது. மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று 230 கோடிக்கு மேல் வசூல் அள்ளி பிளாக்பஸ்டர் வரிசையில் இணைந்தது அதனை தொடர்ந்து இன்னொரு வெற்றி படத்தை கொடுக்க வெற்றி இயக்குனர் மகிழ் திருமேனியுடன் கூட்டணி அமைத்திருக்கிறார் லைகா நிறுவனம் மிகப் பிரமாண்ட பொருட்ச அளவில் இந்த திரைப்படத்தை தயாரிக்க உள்ளது.
படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். ஆனால் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவுப்பு மட்டும் இதுவரை வெளிவரவில்லை அதற்கு சில காரணமும் இருக்கிறது.ஒரு பக்கம் இயக்குனர் மகிழ் திருமேனி பிரபுதேவா நடிக்கும் ஒரு படத்தில் வில்லனாக நடிக்கிறார் மறுபக்கம் நடிகர் அஜித்தின் தந்தை சுப்பிரமணியம் அவர்கள் இறந்ததால் சில வாரங்கள் போகட்டும்..
அதன் பிறகு ஏகே 62 படத்தின் அறிவிப்பு சொல்லிவிடலாம் என இருக்கிறது இந்த நிலையில் லைகா நிறுவனத்தின் தமிழ் குமரன் பேசுகையில் ஏகே 62 படம் குறித்து ஒரு நல்ல செய்தி சொல்லி இருக்கிறார் அதாவது.. ஏகே 62 படத்தின் அறிவிப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டு மே மாதம் முதல் படப்பிடிப்பு தொடங்கும் என உறுதியாக இருக்கிறது என கூறி உள்ளார்.
அதை முடித்துவிட்டு அஜித் இரண்டாவது கட்ட உலக பைக் சுற்றுப்பயணம் செய்யவும் திட்டமிட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது இந்த தகவல் தற்போது அஜித் ரசிகர்கள் பெரிய அளவில் கொண்டாட வைத்து உள்ளது அதுமட்டுமல்லாமல் இந்த தகவலை சோசியல் மீடியாவில் வைரல் ஆகியும் வருகின்றனர்.