தொடர்ந்து சினிமாவில் பல கோடி பட்ஜெட்டில் உள்ள திரைப்படங்களை தயாரித்து வரும் லைகா நிறுவனம் அனைத்து முன்னணி நடிகர்களையும் விலைக்கு வாங்கி வருகிறது என்று தான் கூற வேண்டும். நடிகர்களும் சம்பளத்திற்கு ஆசைப்பட்டு லைகா நிறுவனம் தயாரிக்கும் திரைப்படங்களில் தொடர்ந்து நடித்த வருகின்றனர்.
அந்த வகையில் லைக்கா நிறுவனம் தொடர்ந்து முன்னணி நடிகர்களின் திரைப்படங்களை இயக்கி வரும் நிலையில் தற்போது ஏகே 62 திரைப்படத்தினை தயாரிக்க இருக்கிறது. எனவே இது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அஜித் ரசிகர்களுக்கு தற்பொழுது பெரிய ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது.
அதாவது சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் 170ஆவது படத்தினை லைகா நிறுவனம் தயாரிக்க இந்த நிலையில் தற்போது குறித்த அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. லைகா நிறுவனத்தின் தலைவர் சுபாஸ்கரன் அவர்கள் பிறந்த நாளன்று சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ‘தலைவர் 170’ படத்தின் அறிவிப்பை அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.
லைகா ப்ரொடக்சன் நிறுவனத்தின் மற்றொரு பெருமைமிகு தருணம் இது.. தலைமுறைகள் கடந்து திரை ரசிகர்களை மகிழ்வித்து மகிழ்கின்ற சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் ‘தலைவர் 170’ படத்தின் பணிகள் இனிதே ஆரம்பம். இயக்குனர் திரு.த.சே ஞானவேல் இயக்கத்தில், இசைவழி நம் இதயங்களை இணைக்கும் திரு.அனிருத் இசையில், திரு சுபாஷ்ரன் தயாரிப்பில், லைகா ப்ரொடக்ஷன் தலைமை பொறுப்பாளர் திரு.ஜி.கே.எம் தமிழ் குமரன் அவர்களின் தலைமையில் தலைவர் 170வது படம் 2024ஆம் ஆண்டு திரைக்கு வரும் என்பதனை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறோம் என கூறியுள்ளனர்.
மேலும் சூப்பர் ஸ்டார் அவர்களின் மற்றொரு திரைப்பட வெளியிடும் ரசிகர்கள் கொண்டாடும் திருவிழா தான் அவருடன் மீண்டும் இணைவதில் லைகா ப்ரோடுக்ஷன் பெருமிதம் கொள்கிறது. அனைவரின் வாழ்த்துக்களோடு 2024 மாபெரும் கொண்டாட்டத்திற்கு தயாராவோம்,நன்றி!!! என லைகா நிறுவனம் அறிக்கை வெளியிட்டுள்ளது.