பொன்னியின் செல்வன் படத்தில் நடித்த பல நடிகருக்கு சரியாக லைக்கா நிறுவனம் சம்பளம் கொடுக்காத நிலையில் தற்போது பஞ்சாயத்தில் வந்து நிற்கிறது. அதாவது மணிரத்தினம் இயக்கத்தில் சுமார் 500 கோடி பட்ஜெட்டில் மிகவும் பிரம்மாண்டமாக உருவான பொன்னியின் செல்வன் படத்தினை லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்து இருந்த நிலையில் இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய், பிரபு, நாசர், ஜெயராம் ரமேஷ் உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாள்கள் இணைந்து நடித்திருந்தனர்.
ஐந்து பாகங்கள் கொண்ட பொன்னியின் செல்வன் கதையினை இரண்டு பாகங்களாக உருவாக்க முடிவு செய்த நிலையில் முதல் பாகம் வெளியாகி மிகப்பெரிய வெற்றினை பெற்றது. இதில் நயவஞ்சனையாக வரும் நந்தினி சோழர்களைப் பழிவாங்க 24 வயது முதியவரான பெரிய பழுவேட்டயரை திருமணம் செய்து கொண்டு ராஜ்யத்தை கைப்பற்ற தந்திரமாக காய்களை நகர்த்துகிறார்.
இவ்வாறு முதல் பாகத்தில் இந்த கதைய இடம் பெற்றிருந்த நிலையில் இனி வரும் இரண்டாவது பாகத்தில் ஆதித்ய கரிகாலன் காதல் விவகாரம் தெரிந்ததும் அரண்மனையை விட்டு வெளியேற்றிய நந்தினி எங்கு சென்றாள், வீரபாண்டியனுடன் அந்த குடிசையில் ஏன் இருந்தார், பாண்டியர்களுக்கு அவர் உதவி செய்ய என்ன காரணம், அந்த ஊமைப் பெண் யார், என்ற பல கேள்விகளுக்கு முதல் பாகத்தில் கிடைக்காத பதில் இரண்டாவது பாகத்தில் கிடைக்க இருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் குடந்தை ஜோதிடர் இந்த கதாபாத்திரம் பற்றி பல இடங்களில் பேசப்பட்ட நிலையில் குடந்தை ஜோதிடர் கேரக்டரில் நடித்த நடிகர் காத்தாடி ராமமூர்த்தி சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் ஆனால் இவர் நடித்திருந்த பல காட்சிகள் நீக்கப்பட்டது எனவே இந்த படத்தில் அவர் நடித்ததற்கும் அவருக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என சம்பளம் தரவில்லை.
எனவே எழுத்தாளர் பட்டுக்கோட்டை பிரபாகர் தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டு அவருக்கான சம்பளத்தை லைக்கா நிறுவனம் வழங்கவில்லை எனக் கூறியிருந்தார். இது இணையதளத்தில் வைரலாக இதற்கு லைக்கா நிறுவனம் ஜோதிடர் வேடத்தில் நடித்த காத்தாடி ராமமூர்த்திக்கு சம்பளம் கொடுத்து விட்டதாக தகவல் கூறியுள்ளனர். எனவே இவ்வாறு ஓராண்டிற்கு மேலாகியும் லைக்கா நிறுவனம் சம்பளம் தராமல் இருந்து வருவது மிகவும் தவறு என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.