lust stories 2 tamanna salary : நடிகை தமன்னா லாஸ்ட் ஸ்டோரிஸ் 2 திரைப்படத்திற்காக கோடி கணக்கில் சம்பளம் வாங்கியுள்ளது தற்பொழுது இணையதளத்தில் வெளியாகி வைரல் ஆகி வருகிறது.
நடிகை தமன்னா 2005 ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி வெளியாகிய சாந்த்சா ரோஷன் ஹெக்ரா என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர். முதன் முதலில் இந்தி திரைப்படத்தில் அறிமுகமானாலும் 2006 செப்டம்பர் 24ஆம் தேதிவெளியான கேடி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகிற்கு அறிமுகமானார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து விஜய் உடன் சுரா அஜித்துடன் வீரம், சூர்யாவுடன் அயன் என பல முன்னணி நடிகர்களின் திரைப்படத்தில் நடித்தார்.
அதுமட்டுமில்லாமல் தனுஷ் உடன் படிக்காதவன் கார்த்தியுடன் பையா ஆகிய திரைப்படங்களிலும் நடிகை தமன்னா நடித்திருந்தார். அதன் பிறகு பாகுபலி நடிகர் பிரபாஸ் அவர்களுடன் இணைந்து பாகுபலி திரைப்படத்தில் நடித்து ஒட்டுமொத்த இந்திய சினிமா அளவில் மிகவும் பிரபலம் அடைந்தார்.
அதுமட்டுமில்லாமல் நடிகை தமன்னா தெலுங்கில் ஏராளமான வெற்றி திரைப்படங்களில் முன்னணி கதாநாயகர்களுடன் இணைந்து நடித்துள்ளார், தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தி என பல மொழிகளிலும் தமன்னா தொடர்ந்து நடித்து வருகிறார் அண்மையில் இவர் நடிப்பில் வெளியாகிய ஜீ கருடா என்ற வெப் தொடர் வெளியானது.
அதுமட்டுமில்லாமல் தமன்னா நடிப்பில் சமீபத்தில் வெளியாகிய லாஸ்ட் ஸ்டோரீஸ் வெப் தொடர் கடந்த வாரம் வெளியானது. இந்த திரைப்படத்தில் காட்சிகளுக்கு பஞ்சமே கிடையாது அந்த அளவு காட்டு காட்டுன்னு காட்டிவிட்டார். ரசிகர்களால் போதும் போதும் என்ற அளவிற்கு திக்கு முக்காடினார்கள்.
இந்த நிலையில் தற்போது இவர் ரஜினியுடன் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் ஜெயிலர் திரைப்படத்திலும் நடித்து வருகிறார். லாஸ்ட் ஸ்டோரிஸ் இரண்டாவது தொடரில் இதுவரை இல்லாமல் தற்பொழுது எல்லை மீறிய கவர்ச்சி காட்சிகளில் நடித்து ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.
படுக்கையறை காட்சி முத்த காட்சி என பின்னி பெடல் எடுத்தார் இதைப் பற்றிதான் சமூக வலைதளங்களில் அதிகமாக பேசப்பட்டன இந்த நிலையில் இந்த திரைப்படத்திற்காக நடிகை தமன்னா வாங்கிய சம்பளம் தான் தற்பொழுது பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. இந்த படத்திற்காக தமன்னா ஏழு கோடி வரை சம்பளமாக வாங்கியுள்ளாராம். இதைக் கேள்விப்பட்ட ரசிகர்கள் பலரும் இத்தனை கோடி சம்பளம் கொடுத்தா யாருதான் நடிக்க மாட்டாங்க என கமெண்டில் கழுவி ஊற்றி வருகிறார்கள்.