விஜய்யின் புலி பட நடிகருக்கு அடித்த அதிர்ஷ்டம்.! 500 கோடி பிரபாஸ் திரைப்படத்தில் ஒப்பந்தம்.! தலைவனுக்கு எங்கேயோ மச்சம் இருக்கு போல

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக வலம் வந்து கொண்டிருப்பவர் தளபதி விஜய். இவர் நடிப்பில் வெளிவந்த பல திரைப்படங்கள் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்ப்பை பெற்றிருந்தது. ஆனால் ஆனால் ஒரு சில திரைப்படங்கள் படும் தோல்வியை அடைந்துள்ளது.

அந்த வகையில் விஜய் நடிப்பில் வெளிவந்து ரசிகர்கள் மத்தியில் பெரும் தோல்வியை தழுவிய திரைப்படம் புலி.இத்திரைப்படம் இப்படி இருக்கும் அப்படி இருக்கும் என்று படக்குழுவினர்கள் சொன்ன தகவல்களால் ரசிகர்களும் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வந்தார்கள். ஆனால் அனைவருக்கும் பெரும் ஏமாற்றமாக அமைந்தது.

ஏனென்றால் திரைப்படம் குழந்தைகள் பார்க்கும் அளவிற்கு இருந்தது.இத்திரைப்படம் விமர்சன ரீதியாக தளபதி விஜய்க்கு பெரும் தோல்வியை தழுவியது. இந்நிலையில் தற்போது இத்திரைப்படத்தில் நடித்திருந்த நடிகர் ஒருவருக்கு பிரபாஸ் நடிப்பில் 500 கோடி பட்ஜெட்டில் உருவாகும் மிகப்பெரிய படமொன்றில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது.தற்ப்பொழுது இந்த தகவல் தான் இணையதளத்தில் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.

அந்த வகையில் புலி திரைப்படத்தில் நடிகர் விஜய்க்கு வில்லன் கதாபாத்திரத்தில் நடித்து மிரட்டி இருந்தவர் தான் கன்னட நடிகர் கிச்சா சுதீப். இத்திரைப்படத்தில் இவர் தனது சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். இதற்கு முன்பு நடிகை சமந்தா உள்ளிட்ட இன்னும் பல பிரபலங்கள் இணைந்து நடித்திருந்த நான் ஈ திரைப்படத்திலும் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவர் தொடர்ந்து இன்னும் பல திரைப்படங்களிலும் வில்லன் கதாபாத்திரம் நடித்து வருகிறார். இவர் தமிழில் பிரபலம் அடைவதற்கு முன்பு தெலுங்கில் முன்னணி நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் தற்பொழுது பிரபாஸ் நடிப்பில் 500 கோடி பட்ஜெட்டில் பிரமாண்ட திரைப்படமாக உருவாகி வருவது ஆதிபூஷன்.

இத்திரைப்படம் முழுக்க முழுக்க நவீனகால டெக்னாலஜியை பயன்படுத்தி உருவாகிவருகிறது. இத்திரைப்படத்தில் நடிகர் பிரபாஸ் இவருக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை கீர்த்தி சானொன் நடித்து வருகிறார்.இத்திரைப்படம் இராமாயணத்தை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. அந்தவகையில் இத்திரைப்படத்தில் பிரபாஸ் ராமன்னா நடிக்க ராவணனாக பாலிவுட் நடிகர் சைப் அலி கான் நடித்து வருகிறார்.

இந்நிலையில் தற்போது கொரோனா தாக்கம் அதிகளவில் இருப்பதால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது இத்திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிதாக இருந்து வருகிறது.ஏனென்றால் பாகுபலி திரைப்படத்தை போல இத்திரைப்படமும் பல கோடி பட்ஜெட்டில் உருவாகுவதால் திரைப்படத்திற்காக ரசிகர்கள் காத்து வருகிறார்கள்.