சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சி சீசன் சீசனாக நடத்தப்பட்ட தற்போது ஐந்து சீசன்கள் வரை முடிவடைந்துள்ளது. மேலும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் போட்டியாளர்கள் பலரும் இதன் மூலம் மக்களிடையே பிரபலமடைந்து சினிமா உலகில் மென்மேலும் வளர ஆசைப்படுகின்றனர்.
அந்த வகையில் பிக்பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டவர்தான் ஷிவானி நாராயணன் இவர் சின்னத்திரை சீரியல்கள் மூலம் அறிமுகமாகி ஒரளவிற்கு பிரபலம் அடைந்தவர். பின்பு இவர் என்ன செய்தால் நாம் வெள்ளித்திரையில் பயணிக்கலாம் என்பதை சரியாக யோசித்து போட்டோஷுட்டை கைய்யிலெடுத்தார்.
அந்த வகையில் இவர் சமூக வலைதளங்களில் தொடர்ந்து கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார். மேலும் இவரது புகைப்படங்களுக்கு பல்வேறு ரசிகர்கள் உருவாகின அவ்வாறு மீடியா உலகில் பிரபலமடைந்தன் மூலமே பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது மேலும் இந்த நிகழ்ச்சியிலும் இவர் நீண்ட நாட்கள் பயணித்தார்.
பின்பு இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகு அவர் நினைத்தது போலவே பட வாய்ப்புகள் சில வந்த வண்ணமே உள்ளன. அந்த வகையில் இவருக்கு முதல் படமே டாப் ஹீரோ உலகநாயகன் கமலஹாசன் நடிப்பில் உருவாகிவரும் விக்ரம் திரைப்படத்தில் ஒரு முக்கிய ரோலில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. பின்பு இதனை தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகிவரும் ஒரு திரைப் படத்திலும் நாயகியாக நடித்து வருகிறாராம்.
இவை தவிர வெற்றி நடிப்பில் உருவாகிவரும் “பம்பர்” திரைப்படத்திலும் சிவானி ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் ஆர்ஜே பாலாஜி நடித்து இயக்கும் “வீட்ல விசேஷங்க” திரைப்படத்திலும் ஷிவானி நடிக்க உள்ளார் இப்படி பல்வேறு திரைப்பட வாய்ப்புகள் அவருக்கு வந்தவண்ணம் உள்ளன.
அந்த வகையில் தற்போது வெளிவந்த தகவல் என்னவென்றால் வடிவேலு நடித்து வரும் “நாய் சேகர் ரிட்டன்ஸ்” திரைப்படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் ஷிவானி நாராயணன் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளாராம். இப்படி பல்வேறு திரைப்பட வாய்ப்புகள் ஷிவானிக்கு வந்த வண்ணம் உள்ளதால் ஷிவானி ரசிகர்கள் பலரும் தற்போது செம குஷியில் உள்ளனர்.