தமிழ் சினிமாவில் 2011ஆம் ஆண்டு வழக்கு எண் 18/9 என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா உலகில் அறிமுகமானவர் மனீஷா யாதவ் இவர் நடித்த முதல் திரைப்படத்திலேயே ரசிகர்களை வெகுவாக கவர்ந்து விட்டதால் சிறந்த அறிமுக நடிகைக்கான விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.
அதன் பிறகு தமிழில் ஆதலால் காதல் செய்வீர் என்ற திரைப்படத்தில் வித்தியாசமான கதாபாத்திரத்தை ஏற்று நடித்திருந்தார். அதுமட்டுமில்லாமல் ஜன்னலோரம், திரிஷா இல்லனா நயன்தாரா, சென்னை 600028 இரண்டாவது பாகம், ஒரு குப்பை கதை சண்டி முனி என பல திரைப்படங்களில் நடித்து வந்தார்.
ஒரு கால கட்டத்தில் இவர் நடித்த திரைப்படங்கள் ரசிகர்களிடம் சரியான வரவேற்பைப் பெறாததால் பட வாய்ப்புகள் குறைய தொடங்கியது. அதனால் திருமணம் செய்து கொண்டு சினிமாவில் நடிப்பதற்கு முழுக்கு போட்டார்.
சமூக வலைத்தளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கும் மனிஷா யாதவ் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம் அந்த வகையில் சமீபத்தில் சில கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை திக்குமுக்காட செய்தார் இந்த நிலையில் தற்பொழுது கண்களில் நீல நிற கலரிங் கொடுத்துக்கொண்டு காதலர் தின ஸ்பெஷலாக வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளார்.
இந்த புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகி வருவது மட்டுமல்லாமல் விமர்சனங்களையும் பெற்று வருகிறது.